Thursday, July 14, 2011

தமிழர் அன்றிலிருந்து இன்றுவரை அடிமையான வரலாறு :

களப்பிரர்களின் ஆட்சியின் தமிழ் நாட்டு இருண்டகாலம் தவிர்த்த இற்றைத் தமிழர் இழிநிலைக்கு இந்த தொடரும் அடிமைத் தனமும் ஒரு காரணியா?     யார் கண்டது ? உண்மை அறிய முயலுவோமே !  


சிம்மவிட்னு பல்லவன் : 
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்தான் ! ஒழித்தான் களப்பிரரை ! நல்லது ! ஆனால் இன்றும் தொடரும் கிரந்தக் கேட்டை தமிழுக்கு கொணர்ந்தவர்களே இவர்கள் பல்லவர்கள் !


பாண்டியன் கடுங்கோன் :
நற்றமிழ் வளர்த்த பாண்டியர்களில்  கடுங்கோனும் தெற்கிலிருந்து களப்பிரரை ஒழித்து பின்னர் வந்த   பாண்டியர்கள் ஆட்சி  கி.பி. 966 -இல் வீர பாண்டியனுடன் சோழப் பெருவேந்தர் காலத்தில் முடிந்தது  ! 
சோழப்  பெருவேந்தர் காலம் :
கி.பி.915- இல் பராந்தக சோழனால் உருவாக்கப் பட்ட சோழப்பேரரசு கி.பி.1190- இல் வீழ்ச்சியுற தொடங் கியது !


கி.பி.1190 - இல் இருந்து 1364 வரை ஆண்ட பாண்டியர்கள் பின்னர் தென்காசிப் பாண்டியர்கள் ஆனார்கள் !

ராபியர்க்கு அடிமை ஆயினமை:  
1311 - இல் மாலிக்காபூரின் உதவியை சுந்தர பாண்டியன் நாடி தன் பங்காளி வீரபாண்டியனை அழிக்க நினைத்து வேற்றானுக்கு முதன் முதலில் தமிழரை அடிமை ஆக்கினான். (பக்.260 - தமிழ் நாட்டு வரலாறு , முனைவர் பா.இறைஅரசன் )

ii) தெலுங்கர்க்கு அடிமை : 
 1378- 1732- வரை நாயக்கர் ஆட்சி. (பக்.85 . . அறவாணன் நூல் தமிழர் அடிமை ஆனது ஏன் ? எவ்வாறு ?)
      

iii) மராட்டியர்க்கு அடிமை : 


 மராட்டிய மன்னர் சரபோஜி
1676  - 1855   - வரை 180-  ஆண்டுகள் மராட்டியர் தஞ்சை அடிமையாக்கி ஆண்டனர். (பக்.89 . . அறவாணன் நூல் தமிழர் அடிமை ஆனது ஏன் ? எவ்வாறு ?)
.
iv) ஐரோப்பியர்க்கடிமை :  


 வாசுகோடா காமா
கி.பி.1498 - இல் மே திங்கள் 17- ஆம் நாள் மலையாளக் கடற்கரைப் பட்டினமான கோழிக்கோட்டில் போர்ச்சுகல் மாலுமி வாசுகோடா காமா வந்து இறங்கியதில் தொடங்கி 1640 - களில் போர்ச்சுகீசிய ஆட்சியின் அடிமைகளாக்கி போர்ச்சுகீசிய மொழியைத் திணித்தனர்.
(பக்.111 . . அறவாணன் நூல் தமிழர் அடிமை ஆனது ஏன் ? எவ்வாறு ?)
·    
  டச்சுக்காரன் 1649 பிப்ரவரி 10 - ஆம் நாளில்  திருச் செந்தூரைக்   கைப்பற்றினான் .
·     
 
·      1673 –இல் தொடங்கிய பிரெஞ்சு ஆட்சி 1-11-1954  வரை நீடித்தது . ஆயினும் 1963 – ஆண்டில்தான் பிரான்சு பாராளுமன்றம் விடுதலையை சட்டமாக்கிற்று.


ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி 1790 - இல் மதுரையை வாங்கியது. ராமநாதபுரத்தை 1792 –இல் விலைக்கு வாங்கியது.
·      (பக்.125 . . அறவாணன் நூல் தமிழர் அடிமை ஆனது ஏன் ? எவ்வாறு ?)      ராபர்ட் கிளைவ் 
1801 - இல் சென்னையில் ஆங்கில ஆட்சி துவங்கி 1947 - வரை இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசின் அடிமையாய் இருந்தான் தமிழன்.

இந்திய  இறையாண்மை என்ற பெயரில் தொப்புள் கொடி உறவு ஈழத்தமிழர்களின்  பேரழிவின்போது கைகட்டி அமைதி காத்த தமிழரின் அடிமைத்தனம்தான் இன்றும் தொடரும் தொடர்கதை ஆனதே !
·    
எதையோ கூறப்போய் தமிழனின் இழி நிலை, அடிமை வாழ்வை விளக்க வேண்டியதாயிற்று.

v) . தமிழ் இனம் வாழ தன்னிலை அறிதல்  :
·      நம் தமிழ் மொழி தழைக்க, இனம் வாழ தன்னிலை அறிதல்  அடிப்படையன்றோ! தன்னை உணர்ந்தால் நம் குறைகள் தானே நீங்கும் என்பது  உளவியல் (psychology ) உண்மையன்றோ ! தமிழ் நாட்டின் வரலாற்றின் அடிப்படையில் தமிழன் தன் நிலை முழுதும் உணர்ந்தால்அன்றே நிமிர்ந்தெழும் தமிழினமே !

2 comments:

Anonymous said...

https://www.facebook.com/pages/Cauvery-basin/248748898597487

இந்த பேஸ்புக் பக்கத்தை பாருங்கள்; Cauvery basin என்ற இந்த பக்கத்தை LIKE செய்து அதில் உள்ள விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அதில் மீத்தேன் என்னும் பேராபத்தை பற்றியும் மற்றும் அதனை செய்ய துடிக்கும் நிறுவனங்கள் மற்றும் அரசு நடவடிக்கைகள் பற்றி விவரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

Cauvery basin said...

https://www.facebook.com/pages/Cauvery-basin/248748898597487

இந்த பேஸ்புக் பக்கத்தை பாருங்கள்; Cauvery basin என்ற இந்த பக்கத்தை LIKE செய்து அதில் உள்ள விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அதில் மீத்தேன் என்னும் பேராபத்தை பற்றியும் மற்றும் அதனை செய்ய துடிக்கும் நிறுவனங்கள் மற்றும் அரசு நடவடிக்கைகள் பற்றி விவரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.