Thursday, December 30, 2010

யப்பானியரின் இனப் பற்று, மொழிப் பற்று , நாட்டுப் பற்று கொடுத்த வெற்றிகள் :

                                           
 ஹிரோஷிமாவில் அழிவின் அடையாளம்

ஜப்பானின் வீரமும் தாய் மொழியும் !
நான் கொடுத்த தலைப்பு “எங்கெங்கு காணினும்  தாய் மொழியே!தமிழ் நாட்டிலா? இல்லை! இல்லை ! நான் கண்ட ஜப்பானில் !” ஆனால் சொல்லத் தொடங்குவதோ அவர்தம் வீரத்தையும் சேர்த்து ! என்னவாயிற்று இவருக்கு ? நல்ல கேள்வி ! 

தாய் மொழியில் கல்வி கற்று  , தன் மொழிப் பற்று , இனப் பற்று , நாட்டுப் பற்று, கொண்டதுடன் இவைகளின் விளைவால் யப்பானியர் வீரம் செறிந்து,  ஐரோப்பியரின்  கீழ் அடிமைப்படா மூன்று ஆசிய நாடுகளில் ஒன்றாக மிளிர்கிறது !
 மிக வளர்ந்தநாடுகளில் ஒன்றாகவும் ஆனார்களே ! 

ஆனால் நாமோ தாய் மொழிக் கல்வியா ? என்ற கேள்வி வேறு ! உருப்பட்டாபோலத்தான் !  தமிழருக்குள் மட்டுமாவது தமிழில் ஆங்கிலம் கலவாது பேசுகிறோமா ? நாட்டான் மட்டும் தான் தமிழில் பேசுவான் என்று கேலி வேறு ! 
தாய் மொழிப் பற்று ஒன்று மட்டுமே இந்த மூன்று நாடுகளான யப்பான், சீனா , தாய்லாந்து ஆகியனவற்றை அடிமைத்தளையிலிருந்து காப்பாற்றியது என வரலாறு பகர்கிறது !

2. உலக வரலாற்றில் பின் நோக்கிய ஒரு சிறு பயணம்:</b>
சீனா , ஜப்பான் , தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகள் மட்டும் வெளிநாட்டு ஆளுகையின் கீழ் வந்ததில்லை ! ஏன் ? இந்த மூன்று நாடுகளைப் போல் தன் மொழி, இனம், பண்பாடு காக்கத் தவறியதால் தமிழனுக்கு இன்றைய இழி நிலை !

<b>3. பிறநாடுகளுடன் வரலாற்று ஒப்பாய்வு :</b>
தமிழரின் இற்றை நோய் நாடி அவர்தம் நோய் முதல் நாடி அதற்கும் மருந்து கண்ட மேனாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ?" எனும் தன் நூலில் சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே ஐரோப்பியருக்கு அடிமையாகாமல் தன்மானத்தை இழக்காமல் போராடி நின்றன எனத் தெரிவிக்கிறார்.

<b>I .(அ) தன் நிலை அறியாத சான்றோர் யார்?</b>
தமிழறிஞராகிய அவர், வரலாற்று ஒப்பாய்வாளராகவும், நம் இனத்தின், மொழியின், நாட்டின் இழி நிலைக்கு மருத்துவராகவும் மருந்தும் கண்டார் !
மருத்துவர் மருந்துச் சீட்டுதான் எழுத முடியும் ! நோயுற்ற தமிழினம் தனக்கு நோய் உள்ளது என்று உணரின் அன்றோ மருந்தைத் தேடுவர்!தொடுவர் ! துடித்தும் 
எழுவர் ! நாம்தான் தன் நிலை அறியாச் சான்றோர் ஆயிற்றே !

<b>ஆ. சீனம் ஐரோப்பியருக்கு அடிமை ஆகாமை :</b>
சீனத்து வரலாற்றைத் தெரிந்தவர்கள் பிரிட்டிஷ் அரசின் குள்ளநரித்தனத்துக்கு முதல் முயற்சியிலேயே குட்டு வைத்து சீனத்துள்ளே நுழைய பல கட்டுப்பாடுகள் விதித்து மீறினால் கடும் தண்டனை என மிரட்டியும்  பின்னர் அனுமதித்தார்கள்.
அப்படியும் சீனர்களைக் அபினி (ஓப்பியம்) போதைக்கு அடிமையாக்கி ஆங்கில வணிகர் என்ற போர்வையில் வந்த நாடு பிடிக்கும் குள்ள நரிக் கூட்டம் தன் புத்தியைக் காட்டியது.
1729-இல்  சீன அரசு  அபினிக்குத் தடை விதித்தது! பிரிட்டிஷ் அரசு தன்னாட்டு அபினி வியாபரிகளைக் கண்டிக்கத்தானே வேண்டும்! செய்தார்களா ? ஆனால் மாறாக ஆங்கில வணிகத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் இரண்டு கப்பல்களை சீனாவின் கான்ட்டன்  நகருக்கு அனுப்பி வைத்தது  பிரிட்டிஷ் அரசு ! தரை இறங்கிய வீரர்கள் ஒரு சீனரைக் கொன்று சீன வணிகக் கப்பல்களை மூழ்கடித்தனர்!
1840-இல் சீனத்துக்கு எதிரான முதலாம் அபினிப் போர் எதிர்பாராமல் நடந்தது. அந்த ஆங்கிலேயரை  அடித்தும் விரட்டினர் கான்ட்டன் மக்கள்.
1842- இல் மீண்டும் ஆங்கிலேயர் அபினிப் போரைத் திணித்தனர்.வெட்கம் ! வெட்கம்! இதில் இந்தியாவிலிருந்து வந்த 10000 பேர் கூலிப்படையினரென்று சீன வரலாற்று ஆசிரியர் சுட்டுகின்றனர்.
போர்ச்கீசியரும், ஸ்பானியரும், பிரிட்டிஷாருடன்  பிரெஞ்சுக் காரனும் கூட்டு சேர்ந்து தொடர்ந்து சீனத்துக்கு தொல்லை கொடுத்துவந்தனர்.
31-01-1949  அன்று பொதுஉடைமைப் படைகள் பீக்கிங்கைக் கைப்பற்றும் வரை  ஓயாத போராட்டத்தை சீன மக்கள் தொடர்ந்து நடத்தினர்.

இப்போதாவது புரிகிறதா தமிழர்களே ! ஆங்கில வணிகர்கள் என்ற போர்வையில் வந்த நாடு பிடிக்கும் நரிகளே பிரிட்டிஷ் அரசும் மற்ற ஐரோப்பிய நாடுகளும்  என்றே !

<b>இ. யப்பானின் வீரம் ஐரோப்பியரைத் தாக்கி அழித்ததுவே:</b>
மேல் நாட்டரின் பண்பாட்டுத் தாக்கத்தை ஜப்பானியரின் போர்க்குணமும் தாய் மொழிப் பற்றும் தவிடு பொடியாக்கிற்று . இன்றளவும் இந்தத் தன்மானம் அந்த நாடுகளுக்கு கொடுத்த பலனை அந்நாடுகள் இன்றுவரை அனுபவித்தும் வருகிறார்கள் .

<b>ஈ. ஜப்பானியரின் எழுச்சிமிகு நடவடிக்கைகள் :</b>

<b>i. போர்ச்சுகீசியர் நாடு கடத்தப்பட்டனர் !</b>
தொகுகாவா இயேயாசு (கி.பி.1603-1605) என்னும் சோகன் தலைமுறையைச் சார்ந்தவர் ஜப்பான் மன்னர் ஆனார். அவர் அரசராவதை அப்போது ஜப்பானில் நுழைந்திருந்த போர்ச்சுகீசியர்கள் (கி.பி 1600 ) எதிர்த்தனர். எனினும் அவர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் அரசரானார்.

1614–இல் நாகசாக்கி என்னும் இடத்துக்கு வரச்செய்து அந்த போர்ச்சுகீசியரகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு செய்தார்  ஜப்பானிய அரசர் !

<b>ii. பிரான்சிஸ் சேவியரின் தோல்வி :</b>
இந்தியாவுக்கு வந்து மத மாற்றம் செய்து புகழ் பெற்ற பிரான்சிஸ் சேவியர் 1549-இல் ஜப்பானக்குச் சென்று அந்நாட்டு அரசரை மதம் மாற்ற முயன்று தோல்வியுற்று 1553- இல் கோவாவுக்குத் திரும்பினார். 1587 - இல் கிருத்துவ மதப் பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1612 – இல் கிருத்துவ மதம் தடை செய்யப்பட்டது.

<b>iii. ஸ்பானியர்களுக்குத் தூக்கு தண்டனை :</b>
1616–இல் அரசின் சந்தேகத்துக்கு ஆளான ஸ்பானியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.

<b>iv ) ஐரோப்பியர்க்கு உதவிய நாட்டுடன் உறவு முறித்தல் :</b>
இவர்கள் வருகைக்குக் காரணமாகவும் துணை யாகவும் இருந்த பிலிப்பைன்சுடன் ஜப்பான் உறவை முறித்துக்கொண்டது.

<b>v ) ஐரோப்பியரைத் தனிமைப் படுத்தித் தீவில் சிறை வைப்பு :</b>
போர்ச்சுகீசியர், ஸ்பானியர், ஆங்கிலேயர் , டச்சுக்காரன், ஆகியவர்களின் செயல்கள் நம்பிக்கைக்கு உரியனவாக இல்லாமையால், நாகசாகிக்கு அருகில் உள்ள தேஷிமா தீவுக்கு அனுப்பி அங்கும் ஓராண்டுக்கு மேல் இருப்பது கூடாது என்றும் அவர்கள் தங்கள் மனைவியரைக் கொண்டு  வருவதும் தடை செய்யப்பட்டது .

<b>vi. ஜப்பானில் நுழைய ஐரோப்பியர்க்குத் தடை - மரண தண்டனை :</b>
1637 -38- இல் ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியரும் ஜப்பானுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது . மீறினால் மரண தண்டனை என்றும், அவர்களை ஏற்றி வரும் மாலுமிகளும் தீக்கு இறையாவார்கள் என்றும் அறிவித்தார்கள். மறைவாக வாழ்ந்து வந்த ஐரோப்பியர்கள்61 - பேர்கள் கண்டு பிடிக்கப்பட்டுத்  தூக்கிலும் இடப்பட்டார்கள்.

<>vii. ஐரோப்பியரின் பழிக்குப் பழி :


இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியில்  அணு குண்டு போடாதது ஏன் ?
1. அது ஐரோப்பிய நாடு !
2. 300 – ஆண்டுகட்கு முன் யப்பானில் மூக்கை நுழைத்த போர்துகீசியரை யப்பானியர் கொன்றொழித்த காரணியால் ! பழிக்குப் பழி ! யப்பான் தீக்கிரை !  
இப்படி வெற்றிகரமாகவும் , மாவீரத்துடனும் ஐரோப்பியர்களை எதிர் கொண்ட யப்பானியர்க்கு பரிசுதான் இரு அணு குண்டுகள் ! 


இப்பொழுது புரிகிறதா ? அணுகுண்டு வீச ஏன் , நாகசாக்கி நகரம் தேர்ந்து எடுக்கப்பட்டது ? ஏனெனில் அதே நாகசாக்கியில்தானே ஐரோப்பியர்கள் சிறை வைக்கப்பட்டு, மரண தண்டனைக்கு ஆளானார்கள். பழிக்குப் பழி என முந்நூறு ஆண்டுகள் கழித்து ஐரோப்பியர் அமெரிக்கா  மூலம் கொடுத்த கொடுந் தண்டனை அல்லவா ?இரண்டாம் உலகப்போருக்குக் காரணமான ஜெர்மனியின் மீது ஏன் அணுகுண்டு வீசப் படவில்லை ? அது ஐரோப்பிய நாடு என்ற ஒரே காரணம்! ஜப்பான் மீதோ! நாமும் வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா ?

 
வரலாறு சொல்லும் பாடம் !
 

<b>II.  (அ)  தாய்லாந்து  ஐரோப்பியரால் அடிமை கொள்ளா நாடு !</b>
<b>மன்னர்கள்:</b>
௧. இராம கமேங் (கி.பி 1287-1317)
௨.இராம திபடி (கி.பி 1350-1369 )
௩ .திரைலோக் (கி.பி. 1448-1488)
மூவரும் மொழி, எழுத்து, மதம் ஆகிய மூன்றும் தாய் மொழி மணம்   கமழுமாறு பார்த்துக் கொண்டது இன்று வரை அவை மாறாமல் இருப்பதற்குக் காரணம் !

அரசரை இறைமை வாய்ந்தவர் என சீன, ஜப்பானிய , தாய்லாந்து ஆகிய நாட்டு மக்கள் நம்பியது ஆளுவோர் வெளியிலிருந்து வருவதும் தடுக்கப் பட்டது .

IV. (அ) தமிழன் முதன் முதலில் அடிமை ஆன ஆண்டு !
1311- இல் மாலிக்காபூரின் உதவியை சுந்தர பாண்டியன் நாடி தன் பங்காளி வீரபாண்டியனை அழிக்க நினைத்து வேற்று மொழியாளனுக்குத் தமிழரை அடிமை ஆக்கினான். (பக்.260 - தமிழ் நாட்டு வரலாறு , முனைவர் பா.இறைஅரசன் )
தெலுங்கர்க்கு அடிமை : 1378 - 1732-
மராட்டியர்க்கு அடிமை : 1676 - 1855

<b>ஆ. அடிமைத் தமிழன் மீண்டும் ஐரோப்பியர்க்கு அடிமையானான் :</b>
ஜப்பானிலோ ஐரோப்பியனை அழித்தொழித்தான் என மேலே விரிவாக ஆராய்ந்தோம் !

ஆனால் 17-05-1498 அன்று கோழிக்கோடு வந்தடைந்த வாசுகோ ட காமா நாடுகளைத் தேடி கண்டுபிடிக்க வரவில்லை ! அவன் போர்ச்கீசிய நாட்டு ஆதரவுடன் நாட்டைப் பிடிக்க வந்த கடல் கொள்ளைக்காரன்! அவனை வருக வருகவென வரவேற்றான் கோழிக்கோட்டு மன்னன் ! இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆட்சிக்கு அன்றே வித்தும் இடப்பட்டது !
1640 - களில் கோழிக்கோடு தொடங்கி மதுரை வரை  போர்ச்சுகீசிய ஆட்சியின் அடிமைகளாக்கி மேற்குக் கரையிலும், கிழக்குக் கரையிலும் , இலங்கை வரை போர்ச்சுகீசிய மொழியைத் திணித்தனர். மதத்தையும் மாற்றினர்.

டச்சுக்காரன் 1649 பிப்ரவரி 10 - ஆம் நாளில் திருச்செந்தூரைக் கைப்பற்றினான் .

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி 1790-இல் மதுரையை வாங்கியது. 1792 –இல் ராமநாதபுரத்தை விலைக்கு வாங்கியது.

1801 - இல் சென்னையில் ஆங்கில ஆட்சி துவங்கி 1947 - வரை இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசின் அடிமையாய் இருந்தான் தமிழன்.

எதையோ கூறப்போய் தமிழனின் இழி நிலை, அடிமை வாழ்வை விளக்க வேண்டியதாயிற்று.

எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு மீண்டும் வருவோம் !
நாம் சிந்திக்க வேண்டாவா ?

  (அ). யப்பானின் வழங்கு மொழி யப்பானிய மொழியே:</b>
மேல்நாட்டாரின் பண்பாட்டுத் தாக்கத்தை யப்பானியரின் போர்க்குணமும் தாய் மொழிப் பற்றும் தவிடு பொடியாக்கிற்று . இன்றளவும் இந்தத் தன்மானம் அந்த நாட்டுக்குக் கொடுத்த பலனை என் யப்பானிய  பயணத்தில் (அக்டோபர் 2008) கண்ணார மனம் குளிரக் கண்டேன். உலக G-8 என்கிற பணக்கார நாடுகளில் ஒன்றான யப்பானில் வழங்கு மொழியோ தாய்மொழி மட்டுமே !


ஆ )எங்கும் எதிலும் யப்பானிய மொழியே :


டோக்யோ விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் மட்டும் போனால் போகிறது என்று பெயர் பலகை ஆங்கிலத்தில் உள்ளது. எங்கும் எதிலும் யப்பானிய மொழியே ! ஆங்கிலத்தின் துணை இன்றி இன்றுவரை யப்பான் விரைந்த உயர்ந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

எழுத்தில்லா யப்பானிய மொழி , சீன பட எழுத்துக்களைப் பயன்படுத்தி ஹிராகானா என்ற மொழிப் பகுதியில் யப்பாநியச் சொற்களையும், சீனத்துச் சொற்களை காஞ்சி என்ற மொழிப் பகுதியிலும் ,“கத்தகானா” என்ற செந்தரப்படுத்திய அயல் மொழிச் சொற்கள் என மூன்றாகத் பிரித்த மொழியே ஆகும். இவ்வாறு இன, மொழி, நாடு என உறுதியாக இருந்த யப்பானியர் அமெரிக்கர்களை, ஐரோப்பியர்களை திணறடித்து அடைந்த வெற்றிகள் வரலாறு படைத்தனவே !

இ) யப்பானியரின் இனப் பற்று, மொழிப் பற்று , நாட்டுப் பற்று கொடுத்த வெற்றிகள் :
i) அந்தக் காலத்தில் மேலை நாட்டினர் பெரும் பொருள் செலவு செய்தும், கடும் உழைப்பை நல்கியும், பல ஆண்டுகள் காத்திருந்து கண்டவைகளை உடனே யப்பானியர்கள் தன் தயாரிப்பாக வெளியிட முடிந்தமை !
ii) இன்றோ யப்பானியர்கள், உலகத்தரம் வாய்ந்த பாலங்கள், ஆண்டுக்கு பத்தாயிரம் முறைகளுக்கு மேல் வரும் நில அதிர்வுகளைத் தாங்கும் விண் முட்டும் கட்டிடங்கள் . ஒரு கிலோ மீட்டர் உயரக் கட்டிடம் என சாதனைகள் !
iii) அதிவேக இரயில் வண்டி : சின்கான்சின் என ஜப்பானிய மொழியில் பெயர் வைத்து மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. அலுங்காமல் குலுங்காமல் இனிமையான பயணம். டோக்கியோவிலிருந்து 800 கி. மீ தொலைவில் உள்ள ஹிரோஷிமா நகரை 3 மணி 30 மணித்துளிகளில் சென்றடைகிறது.iv) மருத்துவத்தில் உலகத்தில் சிறந்த ஆராய்ச்சிகள் நடக்கும் நாடும் யப்பானே! மகிழுந்துகள், மின் அணுக் கருவிகள் , ஒளிப் படக் கருவிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என எண்ணிலடங்கா சாதனைகள் !
v.ஜப்பானில் உள்கட்டமைப்பு !
நாம் எங்கே ? எனது ஜப்பானிய பயணத்தில் நான் கண்ட உள்கட்டமைப்பு : புகைப் படங்கள் காண சொடுக்குக !


என் வலைத்தளமுகவரி :
http://picasaweb.google.co.in/thambu6/xCITAC#

நான் கண்ட இடங்கள் :
நிஷி-காஸ்சாய், அசகுசா, , கின்சா , அகிபாரா டோக்கியோவில் , காமகூரா, ப்யுஜியாமா, ஹக்கொனே, ஹிரோஷிமா, மியாஜிமா , மிசென் மலை ஆகியன மற்ற இடங்கள் !VI. என் கண்ணோட்டத்தில் ஜப்பானும் அவர்தம் பண்புகளும்!
ஜப்பான் என்று அறியப்படும் நாடு தன்னை நிப்பான் என அழைப்பதையே விரும்புகிறது ! நிஹோ(ன்) எனவும் அந்நாடு அழைக்கப்படுகிறது !ஹிரோஷிமா , நாகசாகி நகரங்கள் அணுகுண்டால் தரைமட்டாகி பல லட்ச மக்கள் பொசுங்கி பேரழிவை அடைந்தனர் !
பினிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து எழுந்த நாடு !

வல்லரசுகளுடன் பொருளாதாரப் போட்டியில் முன் நிற்கிறது. ஜி .௮(8) நாடுகளில் வரிசைப் படுத்தப் பட்டுள்ள பணக்கார நாடு !
உழைப்பு , கடும் உழைப்பு , என வேறொன்றை அறியா மக்கள் !
"செய் அல்லது செத்து மடி !" இலக்கணமே நிப்பானியர்கள் ! தற்கொலையிலும் முன்னணி வகிக்கும் நாடே ! அவர்கள் தேனீக்களைப் போல் உழைத்து மடியும் இனம் ! வாழ்ந்து அனுபவிக்கிறார்களாவென்பது மிகப்பெரிய கேள்விக்குறியே !
விட்டால் உலகையே தன் குடைக்குள் கொணரவேண்டும் என்ற வெறியும் அவர்தம் வரலாற்றில் உண்டு. சீனத்தின் மஞ்சூரியா , கொரியா போன்ற நாடுகளை ஆக்கிரமித்த நாடு நிப்பான்.போஸ்டன் தேநீர் விருந்து அமெரிக்க நாட்டின் வரலாறு !


உலகின் அமெரிக்க நாடு இன்று தாதாவாக ஆனது - நிப்பானின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளுக்குப் பின்னர்தானே !

உலகம் உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நாடு ஜப்பான் !Wednesday, December 29, 2010

தமிழரின் இன்றைய நிலை - சமகால மற்றும் வரலாற்றுப் பார்வை:எழுச்சி எண் : ௩ (3)


 இன்றைய தமிழின் நிலை :

அ.) ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம் :

இன்றைய  உண்மை நிலையை ஏற்றுக் கொள்வதில்  மாறான கருத்து இருக்காது. நம்மில் பலருக்குப் ஆங்கிலம் கலவாமல் பேசுவது  இயலாது என்பதும் உண்மை. தனித் தமிழில்  பேசுவது என்பது இயல்பான  வாழ்க்கை  முறையில் நடவாது என்பதை ஏற்றுக் கொள்ள த்தான் வேண்டும்.

ii).ஆனால் தமிழர்களுக்குள்நுனி நாக்கு ஆங்கிலத்தில்70-விழுக்காட்டு க்கு மேல் ஆங்கிலத்திலும் பின் தாய்த் தமிழிலும் பேசிக்  கொள்வதை விடக் கேவலமானது இருக்க இயலாது. இது அன்றாடம் நம்மில் பலருக்கு  பழகிப் பழகி "தமிங்கிலம்" என்ற மொழித் தோற்றம் இயல்பாதாகிவிட்டதோ? தமிங்கிலம்  பேசுபவர்களைத் தமிழை அழிக்கும் "பண்ணி மொழியாளன் " என்றும் சிலர் கடுமையாகக் கூறினர்.
எ.கா:
“Cricket game -ல்  "Ball-ஐ  "throw " பண்ணி  அவன் "catch " பண்ணி  "out " பண்ணி  விட்டான்.

iii).ஆனால் மாற்று சிந்தனையாளரோ, இவர்கள் தமிழையா கொலை பண்ணுகிறார்கள்? இல்லை! இல்லை! ஆங்கிலத்தையல்லவா கொலை  பண்ணு கிறார்கள் ! என்கின்றனர்.

iv) .ஆனால் எதோ ஒன்று நடக்கிறது ! தமிழர்களே விழித்தெழுங்கள் !
இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் உயர்ந்த IPS அல்லது IAS,  அரசு அலுவலர் பலர் தொலைக் காட்சி நேர்காணல் , அறிக்கை மற்றும் செய்தியாளர் கூட்டங்களில் அந்த அந்த மாநில மொழிகளில் பேசுவதைப்  பலமுறை கண்டும் இந்த பண்ணி மொழி பேசும் தமிழனுக்குச்  சுரணை வராதா ?
v).தமிழனைத் தவிர அனைவரும் அவரவர் தாய்மொழியில் பேசுவதைக் கேட்டும் புத்தி வராதா ? ஆங்கிலத்தை தேவையில்லாமல் பேசுவதைப்  பெருமையாக நினைக்கும் தமிழர்களைப் பிற மொழியாளரும், வெளிநாட்டாரும் தமிழனைக் கேவலமாகப் பார்ப்பதும்  பேசுவதும்  தெரியவில்லையா? காதில் விழவில்லையா? இந்த அடிமை புத்தியால்தான் நம் இனமும் மொழியும் அழிகிறது !

ஆ ) தமிழ்  நாட்டில் மட்டும் ஏன் ? :
இந்த  உண்மைகளை, கலக்கத்தை வெளியிடும் நம்மைப் போன்றோருக்கு கிடைக்கும் பட்டம், குறுகிய மனப்பான்மை கொண்ட "தேச விரோதி" என இன்னும் பல.

ii).தாய் மொழிக்கல்வி தமிழ்நாட்டின் தமிழனுக்கு கட்டாயமாக்கப்படும் என்று வாய் திறந்தாலோ தமிழின் எதிரிகள் ஒன்று கூடி உரக்க ஒப்பாரி வைப்பதும, அதனை ஒட்டியே சில ஆங்கில, தமிழ் நாளிதழ்களும், பண் பாட்டினைக் கெடுக்கும் ஆங்கிலச்  செய்தித் தொலைக் காட்சிகளிலும், சிறு குழுக்களாக  இயங்கும் குறுகிய நோக்கு கொண்ட தமிழ் இயக்கங்களின் நாட்டைத் துண்டாடும் சதி, என ஓலைமிடுவதைப் பல முறைக் கண்டுள்ளோம்!

iii).செறிவான வீரம் மிகுந்த தமிழின எதிரிகள் நீதி மன்றங்களை அணுகி தடையாணை வாங்கிய வரலாறு உண்டே இங்கே!

இ). தமிழனே தமிழ் படியாமை :
தாய்த்  தமிழனே தமிழில் அதிக மதிப்பெண்  பெற முடியாதென்று பிரெஞ்சு அல்லது வட மொழி எடுத்து தமிங்கிலம் அவதாரம் எடுத்துவிட்டது அவலம் என்ற  அறியாமையில்  உழல்கிறானே !
ii).இந்த ஆணவம்  கொண்ட தமிங்கில  அவதாரங்கள் நீதி மன்றங்களை நாடி தடைகள் பல வாங்கித் தமிழைத்  தாய் மொழியாக கொண்டவரையும் தமிங்கிலம் பேச  வைத்து ஆணவம் கொண்டவராக மாற்றினரே!
  
ஈ). தமிழ் எதிர்ப்பாளரின் தவிப்பு 

செந்தழ்ச் செம்மல்களின் தீரா சாபங்களைப் பெற்ற இவர்களே  தமிழ்  மொழியை அழிப்பவர் என்ற  யுனெஸ்கோ  மற்றும் மொழி வல்லுனர்களின் கருத்துக்களை முன்னரே இவ்வலைப்பதிவின் எண்: ௧- இல்  பதிவு செய்துள் ளேன். தமிழின் , இனத்தின் எதிரிகளாக உள்ள சில ஆங்கில, தமிழ் நாளி தழ்களும்தமிழ் மற்றும் தமிழின அழிப்பாளர்களும் என்ன பதில் சொல்லப் போகி றார்கள்? 
வேறு எந்த ஆயுதத்தை எடுத்துத் தமிழை அழிக்கப் போகிறார்கள் ?     
ஏன் இன்று இந்த இழிநிலைத் தமிழர்க்கு ? சிந்திப்பீர் ! சிந்திப்பீர் !

).  தமிழ் வழிக் கல்வியின் மாண்பு:
·        i).நமது சமச்சீர் கல்வி கண்ட கல்வியாளர், முன்னாள் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் முத்துக்குமரன் பொறியாளர் ஆயினும் சங்கத்தமிழ் பரி பாடல் வரை அறிந்த தமிழறிஞர் !
·        ii).முன்னாள் துணை வேந்தர் .செ.குழந்தைசாமி அவர்களும் ஒரு பொறியாளர் ஆனாலும் தமிழறிஞர் !
·        iii)மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல் காலம் என்ற எளிய குடும்பத்தைச் சேர்ந்த அறிஞர் குறள் வழி நடந்து, பாராளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில்  திருக்குறளை ஓங்கி ஒலித்தாரே !
·        iv).சந்திரனுக்கு ஆள்  அனுப்பும் திட்ட தலைவரே தமிழ்வழிக் கல்வி பெற்றவர்! அவரே மயில்சாமி அண்ணாதுரை ! அவரும் சில நாட்களுக்கு முன்னர் நம் முதல்வரை சந்தித்து வெளியில் காத்திருந்த ஊடகவியலார் வாயிலாக தமிழ் வழிக் கல்வி பெறுமாறு அனைவர்க்கும் அறைகூவல் விடுத்தாரே !
·        v).எண்ணிலடங்கா இந்திய ஆட்சிப் பணி ...,  .வெ..IFS, IRS, பதவிகளை தமிழில் எழுதியே இன்றைக்கும்  அடைந்து வருகிறார்கள் என்பதும் உண்மை.

 ) .தமிழ் வழிக் கல்வியினரின் ஆங்கிலப் புலமை :
·        அனைவர்க்கும் கல்வி என்ற காமராசர் கண்ட  கனவின் பயனாய்  90 விழுக் காடு தமிழ் வழிக் கல்வி பெற்ற பலரும் பல எட்டா உயரங்களை சிகரங்களை அடைந்தனர். இன்தமிழை இன்றுவரை தமிழ்வழிக் கல்வி பெற்ற நமது தலை முறை எல்லாத் துறைகளிலும் கொடிகட்டிபறப்பது உள்ளதை நம்மில் அனை வரும் அறிவோம். தமிழின்பால் காதலும் ஆங்கிலத்திலும் பெரும் திறமையுடனே வாழ்க்கை நடத்தியும் வருகிறோம். ஆங்கிலத்தின் முழுப் பயனும் அறிந்தே தாய்த் தமிழைப் போற்றியும் வாழ்கிறோம் என்பதும் உண்மை.

                                           (தொடரும் )Saturday, September 4, 2010

தமிழரின் இன்றைய நிலை - சமகால மற்றும் வரலாற்றுப் பார்வை: எழுச்சி.எண். ௨ (2)

எழுச்சி எண்: ௧ (1) -இன் தொடர்ச்சி .......

எழுச்சி எண் : ௨ (2)

"அனைத்துலகத் தாய் மொழிகளின் நாள் !" எழுச்சி எண் : ௧ (1) -இல் மூன்றாவது செய்தியாகச் சொன்னேன் ! ஐக்கிய நாடுகளின் அமைப்பான யுனெஸ்கோவில் ஏன், எதற்கு, எப்படி , எதனால் அனைத்துலகத் தாய் மொழி நாளை ஆண்டுதோறும எல்லா நாடுகளும் கொண்டாடவேண்டும் என்று சொன்னார்கள் என்பதனைப் பின்னால் விரிவாகக் காண்போம்!

சென்ற 21-2-2010 -இல் இந்திய நடுவண் அரசு மிகச் சிறப்பாக ஒருவரும் அறியாமல் கொண்டாடிய செய்தி நாளிதழ்களில் வரவே இல்லை !

 ஏன் ? என்ன அச்சம் ?

அவர்களுக்கே வெளிச்சம் !

நாம் நம் வேலைகளைப் பார்ப்போமே ! தலைப்புக்கு வருவோமே !௪. வெளிப்பகை :

    அ).  அடிமை இந்தியாவில் ஆங்கிலேயரால் ஆப்பிரிக்காவுக்கும், பிரிட்டிஷ் கயானவுக்கும் அடிமைகளாக அனுப்பப்பட்ட தமிழர் இன்று தன் இன அடையாளம் இழந்த நிலை!

    ஆ). பர்மாவில் விரட்டப்பட்ட தமிழர் நிலை!

     இ). அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தமிழரை அழித்தொழித்தமை !

    ஈ). பிஞ்சுக் குழந்தைகளும், பெண்டிரும், முதிர்வடைந்தோர் என பாகுபாடின்றி விமானம், கடல்வழி என இரசாயன கொத்து குண்டுகள்  மற்றும் கனரக பீரங்கிகளைக் கொண்டு, ஆயுதங்களைக்கொண்டு, சென்ற ஆண்டு பொசுக்கி மகிழ்ந்தப் பேரவலம் !

     உ).  இவ்வுலகின் பன்னாட்டு அமைப்பு (ஐ.நா) கைகட்டி வாய்பொத்தி மயான அமைதி காத்தமை !

    ஊ). சாஸ்திரி-சிறிமாவோ இணைந்து இலங்கை வாழ்த் தமிழர்களைத், தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பியமை !

    எ). பம்பாயிலிருந்தும், அருகிலே பங்களுருவிலிருந்தும் தமிழர்கள் உதைத்து விரட்டப்பட்டமை, போன்ற வெளிப்பகை விரிக்கின் பெருகும்!.

      

 II. i. தண்ணீருக்கு தவிக்கும் தமிழ் நாட்டிற்கு கேரளாவோ கடலில் கலந்து வீணானாலும் தண்ணீர் கிடையாது !

     ii கருனாடகமோ தண்ணீர் கிடையவே கிடையாது என்பது எங்களின் முடிந்த முடிபு ! பின் உதைப்பது எதற்கு ? தண்ணீர் என்று கேட்டதற்கு !  கொடுக்கவே மாட்டோம் மீறி கேட்டாலோ அடியும் உதையும் !

     iii. உச்ச நீதிமன்ற தீர்ப்பா ? உடைப்பில் போடு ! குப்பையில் போடு !

     iv.  இது கருநாடக நாட்டின் தீர்ப்பு ! இந்திய நாட்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களைக் கட்டுப்படுத்தாது !

    * v. யாரும் நாட்டின் இறையாண்மைக்கு  எதிரானது என்று சொல்லாமல் கைகட்டி வாய்பொத்தி அமைதி காப்பார்கள் !

    vi. தரம் தாழ்ந்த அரசியலும் தலை தூக்கும் ! இந்திய இறையாண்மையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் !௫. உட்பகை :

"krikketbaal-ஐ thro-பண்ணி catch-பண்ணி out -பண்ணிட்டாண்டா! "

இன்றைய ஆங்கில வழிக் கல்வியின் விளைவு !

இது பண்ணுதல் தமிழ் ! சென்னைத் தமிழ் போல !

இவர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு மேனாட்டுக்காரன் அலறுகிறான் !

In the game of Cricket :," he is declared caught out " ! என்று அவனுக்குப் புரியாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்த இவனுக்கு மட்டுமே முடியும் !

இவர்கள் தமிழையா கொல்கிறார்கள்!  இல்லையில்லை ஆங்கிலத்தையே !

நாம் ஏன் கவலுறுல்வேண்டும் ! ஒல்லாது ! ஒல்லாது !

இதைக் கேட்ட ஆங்கிலேயனும் நகைக்கிறான் ! கேரளா,கருநாடக,ஆந்திர மாநிலத்தவரும் காரி உமிழ்கிறார்கள் ! ஏன் ? அவர்கள் பேசுவது அவர்கள் மொழியில் மட்டுமே !

உட்பகையால் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தினால் வந்த ஆபத்து , தமிழ் கலந்த ஆங்கிலமாக, இல்லை ! இல்லை ! ஆங்கிலமும் சிறிது தமிழும் பேசும் நிலை இன்று உள்ளது. நமது வீட்டிற்குள்ளும் தொலைக்காட்சி வழியே வந்தும் விட்டது. தமிழ் பேசும் அனைவர் ஒற்றுமை கருதி பிற உட்பகை பற்றி கூறாது விடுகிறேன்.ஒருதமிழ்நூல் வெளியீட்டு விழாவில்பேசிய இரா.செம்மல் என்ற தமிழ் ஆர்வலர், "தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், ஒரு தொலைக் காட்சித் தமிழ் நிகழ்ச்சியில் 10 மணித்துளிகளுக்குள் சிறிது தமிழுடன் , 60 மேற்பட்ட ஆங்கில சொற்களைக் கலந்து பேசினார் " என்று கூறி வேதனைப்பட்டார்.

நல்ல செய்திகள் ஒன்றுமே இல்லையா ? இப்படி எழுதுகிறீர்களே !

 தன்னை அறியா , தன்னிலை அறியா தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி ! உலக வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் ! மேல்நாட்டினரும், சீனரும், யப்பாநியரும், தன் நாட்டு வரலாற்றின் அடிப்படையில்தான் அரசியல் நடத்துகிறார்கள் ! ஆனால் நாமோ !ஏன் ? நம் அருமைச் சிங்களர் இன்றுவரை மகாவம்ச வழிகாட்டலில் மட்டுமேதான் அரசியலை நடத்தி அதன் படியே ஈழத் தமிழரை அழிதொழிக்கிறார்கள். வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் முடிந்தால் பிறருடன் கூட்டு சேர்ந்து அனைத்துத் தமிழரையும் அழிப்பார்கள். உலகமும் வேடிக்கை பார்க்கும் !

சிந்திக்கச் சொல்கிறேன் ! வழி என்ன ?

தெரியவில்லை !

 உணர்ச்சிவயப்படாமல் தன் நிலை அறிந்தால் மட்டுமே போதும் ! உன்னையே நீ அறிவாய் !

வழி தானே பிறக்கும் ! நீங்கள் செய்ய வேண்டுவது நம்மை நாமறிவோம் ! உணர்வோம் ! இதுவன்றி பிறிதொன்றும் வேறில்லை !இது ஒன்றே வழி ! வேறு முறை அன்று !  நம் தமிழருக்குள் தமிழுணர்வாளர் நீக்கிய , தமிழ் அறிந்த நம் தலைமுறை நீக்கிய அடுத்த தலைமுறை இளைஞர்கட்கும், குழந்தைகட்கும் நம் நிலை குறித்து கதை சொல்லி போலச் சொல்வோம் !

"எப்படி இருந்த நாம் இப்படி ஆனோமே!" நம் தொல்குடி வரலாறு, ஆங்கிலத் திமிங்கிலம் வாயிலாகவே என் பேரனுக்கும் , பேத்திக்கும் சொல்வது போலே , என் பிள்ளைக்கு சொல்வது போலே கதைசொல்லி போலே வரலாற்று நூல் எழுதி முடியும் தருவாயில் உள்ளது !

நம் பெருமைகளைச் சொல்லி பின் நம் நிலை சொன்னால் புரியும் அனைவர்க்குமே !

நம் வரலாற்றை முதலில் முழுதாக அறிவோமே ! பிறகு பிறரைக் குறை சொல்வோமே ! சரியா !

தொடரும் .........

Friday, August 13, 2010

தமிழரின் இன்றைய நிலை - சமகால மற்றும் வரலாற்றுப் பார்வை:எழுச்சி எண் :௧ (1)


௧ . தொல்குடித் தமிழர் வரலாறு ஏன் ? :
நம் தமிழர் வரலாறு நாம் அறிய வேண்டுவது இயல்பான செயலாகும். இதனை

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பொறியியல், மருத்துவப் படிப்பு போன்றே, அவரரவர் வரலாற்றை அறிவதற்கு முன்னுரிமை தந்து பெருமைப் படுகின்றனர் நன்றியுடன். சமகால அரசின் செயல் பாடுகள் அவர்தம் நாடுகளின் வரலாற்றை ஒட்டியே உள்ளன !

௨. யுனெஸ்கோவின் முடிவு :

தமிழர் வரலாறா ? பத்தாம் பசலி, பழம் பெருமை பேசுவது வீண் என நம்மில் சிலர் நினைத்து நம் வேரில் வெந்நீர் ஊற்றும் கொடுஞ்செயலை கண்டும் காணாதுவிட்டோமாயின் நம் இனமும் மொழியும் அழியும் என்பது "யுனெஸ்கோ" போன்ற பன்னாட்டு அமைப்பின் முடிந்த முடிபு.

௩. "அனைத்துலகத் தாய் மொழிகளின் நாள் - 2004" :

"அனைத்துலகத் தாய் மொழிகளின் நாள்” யுனெஸ்கோவின் ஆலோசனைப்படி ஆண்டு தோறும் பிப்ரவரித் திங்கள் 21- ஆம் நாள் அனைத்துலக நாடுகளிளிலும் கொண்டாடுகிறார்கள், நம் இந்திய நாடு உட்பட ! ஏன் இந்த விழாவைக் கொண்டாடச் சொன்னார்கள்?  வேற்று மொழித் திணிப்பால் தாய் மொழி அழியும் எனும் காரணியால் ! ஆயின் நமக்கு ஏன் இதற்கு மாறான மன நிலை ? நம் தாய்த் தமிழ் காக்க நாம் அனைவரும் நம் வரலாறு மற்றும் சமகாலப் பார்வையினை ஆய்ந்து அறிந்திடல் வேண்டும்!

அன்புத் தமிழ் உள்ளங்களே ! நம் வரலாற்றை ஏன் சமகாலப் பார்வை கொண்டு ஆராய வேண்டும்  வேறு ஏதேனும் காரணிகள் உண்டா ?


விடைபெறுகிறேன் மீண்டும் தொடரவே !

Wednesday, March 3, 2010

தமிழின் தொன்மை

தமிழின் தொன்மை::

தமிழ்நாட்டில் 1987-இல் ஆளுநர் ஆட்சியின் போது காரைக்குடியில் கம்பனடிப்பொடி சா.கணேசன் நடத்திய கம்பன் விழாவில் தலைமையேற்ற ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர்  தமது உரையில்

 " உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை வாழும் மொழிகள் நான்கு; அதில் நமது தாய்த் தமிழும்  ஒன்று என உலக மொழியியல் 
வல்லுநர்களின் ஆராய்ச்சியின் முடிவு".  

"இலண்டனில் மேனாள் இந்திய தூதர் என்ற முறையில் , அனைத்துலக மொழியியல் வல்லுநர்களின் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட   ஒரே இந்தியன் என்ற முறையில் நம்  தாய்த் தமிழின் தொன்மைகேட்டு பெருமிதம் அடைந்தேன்"  
என்று கூறினார்.


-
(1987-இல்  சென்னைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி) .


Monday, February 22, 2010

சிந்தனைச் சிறகுகள் !சிந்தனைச் சிறகுகள் !


சிந்தனைச் சிறகுகள் சிறகடிக்கின்றன

சிந்தனை என்ற சொல் கேட்டு- என்

சிந்தனைச் சிறகுகள் சிறகடிக்கின்றன!

வணக்கம் என் வணக்கம்- என் கண்மணி வணக்கம் !


மலர்ந்தேன் நான் ! கமலமென மலர்ந்தேன் யான் !

சிந்தனைச் சிறகுகள் தலைப்பினைக் கண்டே !

இக் காவிரி நாடன் விரிந்தான் - வியந்தான்

சிந்தனைச் சிறகுகள் முளைக்க -முகிழ்க்க

முகிழ்த்தன இறக்கைகள் எனும் தமிழார்வம் !


குன்றேறி சிராப்பள்ளிக் குன்றேறிப்

பறந்து வந்தது இப்பறவை !

தமிழ்ப்பறவை ! தஞ்சைப் பறவை !

தஞ்சைசார் பறவை !


விஞ்சு புகழ் கொசு தமிழ்க் குலவிவர

விண்முட்டும் பெருங்கோயில் -தஞ்சைப்பெருன்கோயில்

மீதமர்ந்தே வளர்ந்த இப்பறவை தமிழ்ப் பறவை

சிலிர்த்தெழுந்தே வந்தது இத்தமிழ்ப்பறவை !


வங்கிப் பணி ! சங்கப்பணி ! தொழிற்சங்கப்பணி !


வேறறியா வெறும் பற்றாளன் ! தமிழ்ப் பற்றாளன் யான் !


அதுவே தகுதி ! அதுவே தகுதியாயின் !


எதுகை மோனை சீர் தளை சந்தம் தேடாது

விரியட்டும் உங்கள் சிந்தனைச் சிறகுகள் !


வண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன தமிழ்

வண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன - தமிழ்

எண்ணப் பறவைகள் சிறகடித்து சிந்தனைத் தேன்

வண்ணச் சிதறலாகி சிந்தனை சிறகடிக்கின்றன !


வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள் தமிழ்

வண்ணச் சீரடிகொடுத்தவனும் அவனே - தமிழ்

எண்ணச் சீரடி இளங்கோவடிகள் அவனே 
கண்ணகியைக் கற்புக்கொரு கண்ணகியைக் காட்டியவனே !


சிந்திக்கிறவன் மனிதன் ! சிந்திக்க வைப்பவனும் அவனே !

சிந்திக்க மறுப்பவனோ மிருகம் ! நிந்திப்பவனும் அவனே !

சிந்திப்பவனை நிந்திப்பவனும் அவனே !

ஆயின் மிருகமஅன்றோ அவனே !


சிந்தனைக்கு கால நேரமுண்டோ ? எல்லையுமுண்டோ !

எழிலார் சிந்தனைக்கு ? மொழியில்லை ! பழியும் உண்டே -சிந்தனைக்கு

உண்டு அவன் கால நிந்தனை ! காலம் கடந்த வந்தனை உண்டு சிந்தனைக்கு!

இறையானான் மண்தனுக்கு இரையான பின்தானே !


கல்லால் அடித்தான் அவனை - கலிலியோ கலிலி

செத்தும் ஒழிந்தான் அவன் கல்லால் அடிபட்டு

கொடும் நஞ்சன்றோ பரிசு - ஏதென்சு சாக்ரடீசுக்கு

சொல்லால் அடித்தான் அவனை - ஆர்கிமிடீசு அவனே !


ஒழித்தார்கள் இவர்களை ! ஒழிந்தார்கள் இவர்களும் இவன்களும்

ஆனாலோ அவன் கண்டு பிடிப்புகளும் சொல்லிட்ட கண்டிட்ட

தத்துவங்களும் ஒழியவில்லை ! அழியவில்லை !

சாக வரம் பெற்ற இவர்களோ நிலத்து வாழ்கிறார்கள் !


இறைவனையும் மறுத்தான் ! இறைவனையே

மறுத்தான் இன்கார்சால் - மறுத்தான்

இங்கு ஒரு சால் ! சால் நிறை பெரியார்

இங்குமொரு பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் !


புதுமைப் பெண் கண்ட பாரதியோ கூறுகிறான் கூவுகிறான்

நாணும் அச்சமும் நாய்கட்கே வேண்டுமாம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் என

விடுதலைக் கும்மி அடிக்கிறான் !

பெண் விடுதலைக் கும்மி அடிக்கிறான் !


கூறியவன் பாட்டுக்கொரு புலவன் பாரதி

கூவியவன் புரட்சிக்கவியவன் - பாரதி

சிந்தனைச் சிறகுகள் முகிழ்த்த

சிந்தனைக் கவியவன் ! கவிச் சித்தனும் அவனே !


வாழ்கிறார்கள் ! இவர்கள் வாழ்கிறார்கள் !

கொள்கைகளில் ! இவர்தம் கொள்கைகளில் !

கொடியவர்கள் அவர்கள் ! கல்லால் அடித்தக் கொடியவர்கள் !

சொல்லால் அடித்த கொடியவர்கள் !


ஆனால் நாமோ கல்லறைக்கு வணக்கம் சொன்னோம் !

அவர்தம் சிந்தனைக்கு மலர் வளையம் கண்டோம் !

ஆனால் நானோ விளிக்கிறேன் உங்களை !

சிந்தனைச் சிறகுகள் விரித்த உங்களை !

அழைக்கிறேன் ! சிந்தனைப் பறவைகளே !


வாழும்போதோ கல்லடி! சொல்லடி!

பாராட்டும் சீராட்டும் வாழ்வு மடிந்த பிறகோ !

வேண்டாம் இந்தப் பொய் முகம் ! வேண்டாம்

பொய் நிறை நடப்பு ! நடிப்போ நடிப்பு !


எந்தனைக் கேளிர் ! எந்தனைக் கேளிர் !

வருகவென அழைக்கின்றேன் ! வாருங்கள்!

தருகவென அழைக்கின்றேன் தாருங்கள் !

தருவோம் மலர்ச்செண்டை வாழும்போதே !


கூறுங்கள் தெய்வமென்றே ! சிந்தனையே தெய்வமென்றே !

காணமுடியாது ! காணமுடியாது ! தெய்வத்தினையே !

சிந்தனையைக் காணமுடியாது கண்ணால் !

மனக்கண்ணால் காணமுடியும் தெய்வத்தினையே !

உணரமுடியும் அதனையே ! உணரமுடியும் சிந்தனையையே !

மனக்கண்ணால் உணரமுடியும் ! ஒன்றன்றோ இரண்டும் !


வேண்டாம் சிந்தனை ! வேண்டாம் சிந்தனை !

வேண்டுவதோ முயற்சி ! வேண்டுவது எண்ணம் !

சிந்திக்கவென்றே ! பிறக்கின்றான் சிந்தனையாளனும் !

முகிழ்க்கின்றன சிந்தனைச் சிறகுகள் !


மடை திறந்த வெள்ளமன்றோ ! சிந்தனை மடை திறந்த வெள்ளமன்றோ !

மடைதிறக்க வேண்டாவோ ! மனமெனும் மடைதிறக்க வேண்டாமோ !

சிந்தனை வெள்ளமெனப் பாய சிந்தனை வெள்ளமெனப் பாயும் !

சிந்தனைச் சிறகுகளே ! சிந்தனைச் சிறகுகளே !