Saturday, September 4, 2010

தமிழரின் இன்றைய நிலை - சமகால மற்றும் வரலாற்றுப் பார்வை: எழுச்சி.எண். ௨ (2)

எழுச்சி எண்: ௧ (1) -இன் தொடர்ச்சி .......

எழுச்சி எண் : ௨ (2)

"அனைத்துலகத் தாய் மொழிகளின் நாள் !" எழுச்சி எண் : ௧ (1) -இல் மூன்றாவது செய்தியாகச் சொன்னேன் ! ஐக்கிய நாடுகளின் அமைப்பான யுனெஸ்கோவில் ஏன், எதற்கு, எப்படி , எதனால் அனைத்துலகத் தாய் மொழி நாளை ஆண்டுதோறும எல்லா நாடுகளும் கொண்டாடவேண்டும் என்று சொன்னார்கள் என்பதனைப் பின்னால் விரிவாகக் காண்போம்!

சென்ற 21-2-2010 -இல் இந்திய நடுவண் அரசு மிகச் சிறப்பாக ஒருவரும் அறியாமல் கொண்டாடிய செய்தி நாளிதழ்களில் வரவே இல்லை !

 ஏன் ? என்ன அச்சம் ?

அவர்களுக்கே வெளிச்சம் !

நாம் நம் வேலைகளைப் பார்ப்போமே ! தலைப்புக்கு வருவோமே !



௪. வெளிப்பகை :

    அ).  அடிமை இந்தியாவில் ஆங்கிலேயரால் ஆப்பிரிக்காவுக்கும், பிரிட்டிஷ் கயானவுக்கும் அடிமைகளாக அனுப்பப்பட்ட தமிழர் இன்று தன் இன அடையாளம் இழந்த நிலை!

    ஆ). பர்மாவில் விரட்டப்பட்ட தமிழர் நிலை!

     இ). அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தமிழரை அழித்தொழித்தமை !

    ஈ). பிஞ்சுக் குழந்தைகளும், பெண்டிரும், முதிர்வடைந்தோர் என பாகுபாடின்றி விமானம், கடல்வழி என இரசாயன கொத்து குண்டுகள்  மற்றும் கனரக பீரங்கிகளைக் கொண்டு, ஆயுதங்களைக்கொண்டு, சென்ற ஆண்டு பொசுக்கி மகிழ்ந்தப் பேரவலம் !

     உ).  இவ்வுலகின் பன்னாட்டு அமைப்பு (ஐ.நா) கைகட்டி வாய்பொத்தி மயான அமைதி காத்தமை !

    ஊ). சாஸ்திரி-சிறிமாவோ இணைந்து இலங்கை வாழ்த் தமிழர்களைத், தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பியமை !

    எ). பம்பாயிலிருந்தும், அருகிலே பங்களுருவிலிருந்தும் தமிழர்கள் உதைத்து விரட்டப்பட்டமை, போன்ற வெளிப்பகை விரிக்கின் பெருகும்!.

      

 II. i. தண்ணீருக்கு தவிக்கும் தமிழ் நாட்டிற்கு கேரளாவோ கடலில் கலந்து வீணானாலும் தண்ணீர் கிடையாது !

     ii கருனாடகமோ தண்ணீர் கிடையவே கிடையாது என்பது எங்களின் முடிந்த முடிபு ! பின் உதைப்பது எதற்கு ? தண்ணீர் என்று கேட்டதற்கு !  கொடுக்கவே மாட்டோம் மீறி கேட்டாலோ அடியும் உதையும் !

     iii. உச்ச நீதிமன்ற தீர்ப்பா ? உடைப்பில் போடு ! குப்பையில் போடு !

     iv.  இது கருநாடக நாட்டின் தீர்ப்பு ! இந்திய நாட்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களைக் கட்டுப்படுத்தாது !

    * v. யாரும் நாட்டின் இறையாண்மைக்கு  எதிரானது என்று சொல்லாமல் கைகட்டி வாய்பொத்தி அமைதி காப்பார்கள் !

    vi. தரம் தாழ்ந்த அரசியலும் தலை தூக்கும் ! இந்திய இறையாண்மையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் !



௫. உட்பகை :

"krikketbaal-ஐ thro-பண்ணி catch-பண்ணி out -பண்ணிட்டாண்டா! "

இன்றைய ஆங்கில வழிக் கல்வியின் விளைவு !

இது பண்ணுதல் தமிழ் ! சென்னைத் தமிழ் போல !

இவர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு மேனாட்டுக்காரன் அலறுகிறான் !

In the game of Cricket :," he is declared caught out " ! என்று அவனுக்குப் புரியாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்த இவனுக்கு மட்டுமே முடியும் !

இவர்கள் தமிழையா கொல்கிறார்கள்!  இல்லையில்லை ஆங்கிலத்தையே !

நாம் ஏன் கவலுறுல்வேண்டும் ! ஒல்லாது ! ஒல்லாது !

இதைக் கேட்ட ஆங்கிலேயனும் நகைக்கிறான் ! கேரளா,கருநாடக,ஆந்திர மாநிலத்தவரும் காரி உமிழ்கிறார்கள் ! ஏன் ? அவர்கள் பேசுவது அவர்கள் மொழியில் மட்டுமே !

உட்பகையால் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தினால் வந்த ஆபத்து , தமிழ் கலந்த ஆங்கிலமாக, இல்லை ! இல்லை ! ஆங்கிலமும் சிறிது தமிழும் பேசும் நிலை இன்று உள்ளது. நமது வீட்டிற்குள்ளும் தொலைக்காட்சி வழியே வந்தும் விட்டது. தமிழ் பேசும் அனைவர் ஒற்றுமை கருதி பிற உட்பகை பற்றி கூறாது விடுகிறேன்.



ஒருதமிழ்நூல் வெளியீட்டு விழாவில்பேசிய இரா.செம்மல் என்ற தமிழ் ஆர்வலர், "தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், ஒரு தொலைக் காட்சித் தமிழ் நிகழ்ச்சியில் 10 மணித்துளிகளுக்குள் சிறிது தமிழுடன் , 60 மேற்பட்ட ஆங்கில சொற்களைக் கலந்து பேசினார் " என்று கூறி வேதனைப்பட்டார்.

நல்ல செய்திகள் ஒன்றுமே இல்லையா ? இப்படி எழுதுகிறீர்களே !

 தன்னை அறியா , தன்னிலை அறியா தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி ! உலக வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் ! மேல்நாட்டினரும், சீனரும், யப்பாநியரும், தன் நாட்டு வரலாற்றின் அடிப்படையில்தான் அரசியல் நடத்துகிறார்கள் ! ஆனால் நாமோ !



ஏன் ? நம் அருமைச் சிங்களர் இன்றுவரை மகாவம்ச வழிகாட்டலில் மட்டுமேதான் அரசியலை நடத்தி அதன் படியே ஈழத் தமிழரை அழிதொழிக்கிறார்கள். வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் முடிந்தால் பிறருடன் கூட்டு சேர்ந்து அனைத்துத் தமிழரையும் அழிப்பார்கள். உலகமும் வேடிக்கை பார்க்கும் !

சிந்திக்கச் சொல்கிறேன் ! வழி என்ன ?

தெரியவில்லை !

 உணர்ச்சிவயப்படாமல் தன் நிலை அறிந்தால் மட்டுமே போதும் ! உன்னையே நீ அறிவாய் !

வழி தானே பிறக்கும் ! நீங்கள் செய்ய வேண்டுவது நம்மை நாமறிவோம் ! உணர்வோம் ! இதுவன்றி பிறிதொன்றும் வேறில்லை !



இது ஒன்றே வழி ! வேறு முறை அன்று !  நம் தமிழருக்குள் தமிழுணர்வாளர் நீக்கிய , தமிழ் அறிந்த நம் தலைமுறை நீக்கிய அடுத்த தலைமுறை இளைஞர்கட்கும், குழந்தைகட்கும் நம் நிலை குறித்து கதை சொல்லி போலச் சொல்வோம் !

"எப்படி இருந்த நாம் இப்படி ஆனோமே!" 



நம் தொல்குடி வரலாறு, ஆங்கிலத் திமிங்கிலம் வாயிலாகவே என் பேரனுக்கும் , பேத்திக்கும் சொல்வது போலே , என் பிள்ளைக்கு சொல்வது போலே கதைசொல்லி போலே வரலாற்று நூல் எழுதி முடியும் தருவாயில் உள்ளது !

நம் பெருமைகளைச் சொல்லி பின் நம் நிலை சொன்னால் புரியும் அனைவர்க்குமே !

நம் வரலாற்றை முதலில் முழுதாக அறிவோமே ! பிறகு பிறரைக் குறை சொல்வோமே ! சரியா !

தொடரும் .........