Monday, February 22, 2010

சிந்தனைச் சிறகுகள் !



சிந்தனைச் சிறகுகள் !


சிந்தனைச் சிறகுகள் சிறகடிக்கின்றன

சிந்தனை என்ற சொல் கேட்டு- என்

சிந்தனைச் சிறகுகள் சிறகடிக்கின்றன!

வணக்கம் என் வணக்கம்- என் கண்மணி வணக்கம் !


மலர்ந்தேன் நான் ! கமலமென மலர்ந்தேன் யான் !

சிந்தனைச் சிறகுகள் தலைப்பினைக் கண்டே !

இக் காவிரி நாடன் விரிந்தான் - வியந்தான்

சிந்தனைச் சிறகுகள் முளைக்க -முகிழ்க்க

முகிழ்த்தன இறக்கைகள் எனும் தமிழார்வம் !


குன்றேறி சிராப்பள்ளிக் குன்றேறிப்

பறந்து வந்தது இப்பறவை !

தமிழ்ப்பறவை ! தஞ்சைப் பறவை !

தஞ்சைசார் பறவை !


விஞ்சு புகழ் கொசு தமிழ்க் குலவிவர

விண்முட்டும் பெருங்கோயில் -தஞ்சைப்பெருன்கோயில்

மீதமர்ந்தே வளர்ந்த இப்பறவை தமிழ்ப் பறவை

சிலிர்த்தெழுந்தே வந்தது இத்தமிழ்ப்பறவை !


வங்கிப் பணி ! சங்கப்பணி ! தொழிற்சங்கப்பணி !


வேறறியா வெறும் பற்றாளன் ! தமிழ்ப் பற்றாளன் யான் !


அதுவே தகுதி ! அதுவே தகுதியாயின் !


எதுகை மோனை சீர் தளை சந்தம் தேடாது

விரியட்டும் உங்கள் சிந்தனைச் சிறகுகள் !


வண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன தமிழ்

வண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன - தமிழ்

எண்ணப் பறவைகள் சிறகடித்து சிந்தனைத் தேன்

வண்ணச் சிதறலாகி சிந்தனை சிறகடிக்கின்றன !


வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள் தமிழ்

வண்ணச் சீரடிகொடுத்தவனும் அவனே - தமிழ்

எண்ணச் சீரடி இளங்கோவடிகள் அவனே 
கண்ணகியைக் கற்புக்கொரு கண்ணகியைக் காட்டியவனே !


சிந்திக்கிறவன் மனிதன் ! சிந்திக்க வைப்பவனும் அவனே !

சிந்திக்க மறுப்பவனோ மிருகம் ! நிந்திப்பவனும் அவனே !

சிந்திப்பவனை நிந்திப்பவனும் அவனே !

ஆயின் மிருகமஅன்றோ அவனே !


சிந்தனைக்கு கால நேரமுண்டோ ? எல்லையுமுண்டோ !

எழிலார் சிந்தனைக்கு ? மொழியில்லை ! பழியும் உண்டே -சிந்தனைக்கு

உண்டு அவன் கால நிந்தனை ! காலம் கடந்த வந்தனை உண்டு சிந்தனைக்கு!

இறையானான் மண்தனுக்கு இரையான பின்தானே !


கல்லால் அடித்தான் அவனை - கலிலியோ கலிலி

செத்தும் ஒழிந்தான் அவன் கல்லால் அடிபட்டு

கொடும் நஞ்சன்றோ பரிசு - ஏதென்சு சாக்ரடீசுக்கு

சொல்லால் அடித்தான் அவனை - ஆர்கிமிடீசு அவனே !


ஒழித்தார்கள் இவர்களை ! ஒழிந்தார்கள் இவர்களும் இவன்களும்

ஆனாலோ அவன் கண்டு பிடிப்புகளும் சொல்லிட்ட கண்டிட்ட

தத்துவங்களும் ஒழியவில்லை ! அழியவில்லை !

சாக வரம் பெற்ற இவர்களோ நிலத்து வாழ்கிறார்கள் !


இறைவனையும் மறுத்தான் ! இறைவனையே

மறுத்தான் இன்கார்சால் - மறுத்தான்

இங்கு ஒரு சால் ! சால் நிறை பெரியார்

இங்குமொரு பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் !


புதுமைப் பெண் கண்ட பாரதியோ கூறுகிறான் கூவுகிறான்

நாணும் அச்சமும் நாய்கட்கே வேண்டுமாம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் என

விடுதலைக் கும்மி அடிக்கிறான் !

பெண் விடுதலைக் கும்மி அடிக்கிறான் !


கூறியவன் பாட்டுக்கொரு புலவன் பாரதி

கூவியவன் புரட்சிக்கவியவன் - பாரதி

சிந்தனைச் சிறகுகள் முகிழ்த்த

சிந்தனைக் கவியவன் ! கவிச் சித்தனும் அவனே !


வாழ்கிறார்கள் ! இவர்கள் வாழ்கிறார்கள் !

கொள்கைகளில் ! இவர்தம் கொள்கைகளில் !

கொடியவர்கள் அவர்கள் ! கல்லால் அடித்தக் கொடியவர்கள் !

சொல்லால் அடித்த கொடியவர்கள் !


ஆனால் நாமோ கல்லறைக்கு வணக்கம் சொன்னோம் !

அவர்தம் சிந்தனைக்கு மலர் வளையம் கண்டோம் !

ஆனால் நானோ விளிக்கிறேன் உங்களை !

சிந்தனைச் சிறகுகள் விரித்த உங்களை !

அழைக்கிறேன் ! சிந்தனைப் பறவைகளே !


வாழும்போதோ கல்லடி! சொல்லடி!

பாராட்டும் சீராட்டும் வாழ்வு மடிந்த பிறகோ !

வேண்டாம் இந்தப் பொய் முகம் ! வேண்டாம்

பொய் நிறை நடப்பு ! நடிப்போ நடிப்பு !


எந்தனைக் கேளிர் ! எந்தனைக் கேளிர் !

வருகவென அழைக்கின்றேன் ! வாருங்கள்!

தருகவென அழைக்கின்றேன் தாருங்கள் !

தருவோம் மலர்ச்செண்டை வாழும்போதே !


கூறுங்கள் தெய்வமென்றே ! சிந்தனையே தெய்வமென்றே !

காணமுடியாது ! காணமுடியாது ! தெய்வத்தினையே !

சிந்தனையைக் காணமுடியாது கண்ணால் !

மனக்கண்ணால் காணமுடியும் தெய்வத்தினையே !

உணரமுடியும் அதனையே ! உணரமுடியும் சிந்தனையையே !

மனக்கண்ணால் உணரமுடியும் ! ஒன்றன்றோ இரண்டும் !


வேண்டாம் சிந்தனை ! வேண்டாம் சிந்தனை !

வேண்டுவதோ முயற்சி ! வேண்டுவது எண்ணம் !

சிந்திக்கவென்றே ! பிறக்கின்றான் சிந்தனையாளனும் !

முகிழ்க்கின்றன சிந்தனைச் சிறகுகள் !


மடை திறந்த வெள்ளமன்றோ ! சிந்தனை மடை திறந்த வெள்ளமன்றோ !

மடைதிறக்க வேண்டாவோ ! மனமெனும் மடைதிறக்க வேண்டாமோ !

சிந்தனை வெள்ளமெனப் பாய சிந்தனை வெள்ளமெனப் பாயும் !

சிந்தனைச் சிறகுகளே ! சிந்தனைச் சிறகுகளே !