தென்மொழி தி.பி.௨௦௪௨ (ஏப்பிரல் 2011) இதழில் கட்டுரையாக வெளிவந்தது..........
தஞ்சை கோ.கண்ணன்
“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை ! “
– முனைவர் சாந்தி பப்பு ஆய்வறிக்கை வெளியீடு :
நாள் : 25-03-2011 - இதழ் : Science Journal USA
சர் ராபர்ட் புருசு பூஃட் (Father of Indian Pre-history)
2,00,000 – ஆண்டுகள் !
சென்னை பல்லாபுரத்திலும் (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகை களிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (Father of Indian Pre-history) அறிவித்தார்.
5,00௦௦,000 - ஆண்டுகள் !
அத்திரம்பாக்கம் கற்கருவிகள் தொல்லியல் துறை காப்பாளர், ஆய்வர் டி .துளசிராமன் அவர்களால் 5,00,000 – ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என ஆய்ந்தறிந்த முடிவை சென்ற திங்கள் இதழில் குறிப்பிட்டிருந்தேன்.
இந்தியாவில் முதல் மாந்த குடியேற்றம் : 70000 - 50000 ஆண்டுகள் !
இந்த நிலையில் மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“The Story Of India”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார் ! பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே குறிக்கின் றனர்.
மனித இனத்தின் முன்னோடி ஆசியாவில் தோற்றம் : மனித இனத்தின் முன்னோடி (Asian Origin for Human Ancestors found in Myanmar) தோன்றிய இடம் ஆசியாவே.(மியான்மாரில் ஆய்வு முடிவு) ஆப்பிரிக்காவில் அல்ல என்பதும் 4-06-12 நாளிட்ட அறிவியல் செய்தி இதழில் காண்க: உறலி:

மைக்கேல் வுட்டுக்கு வேண்டுகோள் !
அவ்வாறெனில் தமிழ்நாட்டில், சென்னைக்கருகே சர் இராபர்ட் புருசு பூஃட் அவர்களின் (1863 – 1912) ஆய்வு முடிவான 200,000 – ஆண்டுகள் பழமையான கற் கருவிகளின் கால அளவை கணக்கில் கொள்ளாமல் விடப்பட்டதை சுட்டி, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மின்னஞ்சல் வழியே வேண்டுகோள் விடுத்துள்ளேன் . மேலும் அதே கற்கருவிகள் காலம் 5,00,000 ஆண்டுகள் என்று தொல்லியல் காப்பாளர் டி .துளசிராமன் கணக்கிட்டதையும், இல்லை! இல்லை! 15,00,000 ஆண்டுகள் தொன்மையானவை அவை என முனைவர் சாந்தி பப்பு கூறுவதையும் எடுத்துக்காட்டியும் அவருக்கு எழுதியுள்ளேன்.
எனவே ஆப்பிரிக்க பெருநிலப் பரப்பிலிருந்து மாந்த இனம் குடிபெயர்வதற்கு முன்னரே தமிழ் நாட்டில் மாந்த இனம் தொடர்ந்து இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற முடிவிற்கு வரலாற்றாய்வர்கள் வருவர் என்பது உறுதி ! அதற்கேற்றார்போல இந்தியாவில் இன்றுவாழும் மக்களில், இரு பிரிவுகளாக பிரிந்து, தென்னிந்திய மரபு வழி மரபணு (Genetic) கொண்ட இனம் , வட இந்திய மரபு வழி மரபணுகொண்ட இனத்திலிருந்து மாறுபட்டு , கிழக்காசிய மரபணுவிலிருந்தும் வேறுபட்டு தனித்துவம் கொண்டதாக விளங்குவதாக இன்னுமோர் அறிவியல் ஆய்வு முடிவு கூறுகிறது !
சென்னை மயிலையில் அமைந்துள்ள மரபுசார் கல்விக்கான சர்மா மையத்தின் நிறுவுநர்/செயலர் முனைவர் சாந்தி பப்பு அவர்கள் சென்னையிலிருந்து 60 கி.மி. தொலைவிலுள்ள அத்திரம்பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை ) ஆற்றுப் படுகைகளில் கிடைத்த பழங் கற்கால கற்கருவிகளின் காலத்தை உறுதி செய்திட 1999 – ஆம் ஆண்டிலிருந்து கடந்த 12 – ஆண்டுக ளாக ஆய்வு செய்து வருகிறார்.
அறிவியல் இதழில் ஆய்வறிக்கை !
அவரது ஆய்வின் பயனாக பழங் கற்கால கற்கருவிகளின் காலம் 1.51 மில்லியன் (15,10,000) ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டு அவரின் ஆய்வறிக்கை , அமெரிக்க நாட்டின் அறிவியல் (Science) இதழில் (25 March 2011: Vol. 331 no. 6024 pp. 1532-1533 DOI: 10.1126/science.1203806 ) ஏற்கப்பட்டு வெளிவந்துள்ளது.
இக்கற்கருவிகளின் காலத்தை ஆய்ந்து முடிவு செய்ய பிரான்சு நாட்டு பல்கலைக் கழகம் அவருக்கு துணைபுரிந்தது.
The link : http://science.sciencemag.org/content/331/6024/1532.summary
The link : http://science.sciencemag.org/content/331/6024/1532.summary
ராபின் டென்னெல்:
இங்கிலாந்து நாட்டின் செப்ஃபீல்டு பல்கலைக் கழகத் தொல்லியல் துறை சார் ராபின் டென்னெல் என்பார், “அண்மைக் காலங்களில் தெற்காசிய நாடுகளில் பழங்கற்கால மானுடவியல் ஆய்வுபற்றிய எந்த ஒரு செயல்பாடுகளே இல்லாத குறையினை போக்கு மாற்போலே சாந்தி பாப்பு அம்மையார் அவர்கள் 1 மில்லியன் ஆண்டுகள் முதல் 1.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான கற்கருவிகளின் ஆய்வு முடிவை Science – இதழில் 1596 - ஆம் பக்கத்தில் வெளியிட்டது இந்தத் துறையில் சிறந்த குறிப்பிடத்தக்க ஐயத்திற்கு இடமில்லாத பணியாகும்” எனக் குறிப்பிடுகிறார்.
தொடர் ஆய்வு : (1999 – 2011)
முனைவர் சாந்தி பப்பு அவர்கள் முன்னரே குறிப்பிட்டதைப் போல அவரது பத்தாண்டுகட்கு மேலான பணி (1999 – 2011) அத்திரம்பாக் கத்தில் நடைபெற்றது. அதாவது சர். ராபர்ட் புருசு பூஃட் பெயர் சூட்டிய “மதராசு கற்கோடரி தொழிற்சாலை” பகுதியாகிய அத்திரம் பாக்கம் குடத்தலை ஆற்றுப் படுகைகளில்தான் சாந்தி பப்பு அவர்கள் ஆய்வைத் தொடர்ந்தார்.
மூன்று வகைக கற்கருவிகள் :
மூன்று வகைக கற்கருவிகள் :
அத்திரம்பாக்கம் பகுதியில் மூன்று வகையான கற்கருவிகள் கிடைத்தன . கிழங்கு களைக் கல்லுதல், விலங்குகளை வேட்டை யாடுதல், எலும்புகளின் உள்ளீடை எடுப்பதற்கு என வகைப்படுத்தப் பட்டன.
தொல்பழங்காலம் : கற்கருவிகள் !
இதில் இன்னுமொரு சிறப்பு யாதெனின் பழங்கற்காலத்துக்கு முற்பட்ட தொல்பழங்காலம் தொடர்புடைய கற்கருவிகளின் காலம் என்று இன்று கணிக்கப் பட்டுள்ளது .
169 – இடங்களில் கற்கருவிகள் :
ஆய்வுக்குழுவினரால் , முனைவர் சாந்தி பாப்பு தலைமையின் கீழ் 50,000 ச.மீ பரப்பளவில் இவ்வகழ்வாய்வு அத்திரம்பாக்கத்தில் நடைபெற்றது. இவர்களால் சுமார் 169 இடங்களில் இதே போல் மக்கள், அடர்த்தியாக தொல்பழங்காலத்திலிருந்து தொடர்ந்து இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பது ஆவணபட்டு வருகிறது .
முனைவர் சாந்தி பப்புவிற்கு பாராட்டுகள் :
ராபர்ட் புருசு பூஃ ட் அவர்களின் (1863-1912) ஆய்வுக்குப் பின்னர் முனைவர் சாந்தி பப்பு அவர்கள்தான் முழுமையான ஆய்வுமுடிவை இன்று (2011) உலகிற்கு வெளிப்படுத்தினார். உலகமுழுவதும் இந்த ஆய்வு முடிவு பெரியதொரு தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. முனைவர் சாந்தி பப்பு அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர்.
தமிழ் இனமும் நிலமும் பழமைக்கும் பழமையானது:
அதனைப் (தொல்-பழங்கால கற்கருவிகள்) பயன்படுத்திய மாந்த இனம், அதற்கு முந்தய காலத்தே அதாவது 1.51 மில்லியன் ஆண்டுகட்கு முன்னரே தமிழ் நாட்டில் அத்திரம்பாக்கத்தில் வாழ்ந்து இருக்க வேண்டும் எனில் தமிழ் நிலமும் இன்னமும் எவ்வளவு பழைமையானது என்ற முடிவுக்கே வரவேண்டும்.
தென்னிந்திய மரபுவழி மரபணுவின் தனித்துவம் :
இந்திய நாட்டின் CCMB Hyderabad நிறுவன அறிவியலார் முனைவர் தங்கராசு குமாரசாமி தலைமையில் மூன்று ஆய்வறிஞர்களும், இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தின் மூன்று ஆய்வறிஞர்களும் இணைந்து வெளியிட்ட இந்தியாவின் மரபு வழி மரபணு பற்றிய கூட்டு ஆய்வு முடிவுகள் (Centre for Cellular and Molecular Biology, Hyderabad 500 007 India) “nature” – International Weekly Journal of Science, எனும் அறிவியல் இதழில் 24 – 09 - 2009 அன்று வெளியிடப்பட்டது! இணைய உறலி:URL :( "Uniform Resource Locator, internet address") சொடுக்குக http://www.nature.com/nature/journal/v461/n7263/abs/nature08365.html
இருபிரிவு மரபு அணுக்கள் :
இந்திய நாட்டின் 25 - வேறுபட்ட குழுக்களினிடையே நிகழ்த்தப் பட்ட மரபணு ஆய்வின் முடிவில் வடஇந்திய மரபு வழி, தென் னிந்திய மரபு வழி என இரண்டு மரபணு பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது கண்டறியப்பட்டது .
வடஇந்திய மரபு வழி மரபணு :
வடஇந்திய மரபு வழி ஐரோப்பிய பெருநிலப்பகுதி , ஆசிய பெரு நிலத்தின் நடுப்பகுதி, நடு – கிழக்குப் பகுதி , ஆகிய இடங்களில் வாழும் மக்களின் மரபணுவை ஒட்டி இருக்கிறது !
தென்னிந்திய மரபு வழி மரபணு :
இந்தியாவில் இன்றுவாழும் மக்களில், இரு பிரிவுகளாக பிரிந்து, தென்னிந்திய மரபு வழி மரபணு (Genetic) கொண்ட இனம் , வட இந்திய மரபு வழி மரபணுகொண்ட இனத்திலிருந்து மாறுபட்டு , கிழக்காசிய மரபணுவிலிருந்தும் வேறுபட்டு தனித்துவம் கொண்டதாக விளங்குவதாக அறிவியல் ஆய்வு முடிவு கூறுகிறது !
மனித இனத்தின் முன்னோடி:
இந்தியாவில் இன்றுவாழும் மக்களில், இரு பிரிவுகளாக பிரிந்து, தென்னிந்திய மரபு வழி மரபணு (Genetic) கொண்ட இனம் , வட இந்திய மரபு வழி மரபணுகொண்ட இனத்திலிருந்து மாறுபட்டு , கிழக்காசிய மரபணுவிலிருந்தும் வேறுபட்டு தனித்துவம் கொண்டதாக விளங்குவதாக அறிவியல் ஆய்வு முடிவு கூறுகிறது !
மனித இனத்தின் முன்னோடி:
(i)
மனித இனத்தின் முன்னோடி (Asian
Origin for Human Ancestors found in Myanmar)
தோன்றிய இடம்
ஆசியாவே.(மியான்மாரில் ஆய்வு முடிவு)
ஆப்பிரிக்காவில் அல்ல என்பதும் 4-06-12 நாளிட்ட அறிவியல் செய்தி இதழில் காண்க:
Science AAS Link :
தொடர்ந்து கடற்கோளால் மூழ்கிய குமரிக்கண்டத்தில் (லெமூரியா) தோன்றிய மாந்த இனம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பரவிற்றா ? அல்லது ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு வந்ததா ?
இந்த வினாக்களுக்கு விடையாக 15,10,000 ஆண்டுகட்கு முந்தய பழமையான கற்கருவிகள் தமிழ்நாட்டில் அத்திரம்பாக்கம் குடத்தலை ஆற்றுப் படுகைகளில் கிடைத்தன !
ஆதலின் அதனைப் பயன்படுத்திய மாந்த இனம் 15,௦௦,௦௦௦ ஆண்டுகட்கு முன்னரே தமிழ்நிலத்தில் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் ! இன்றும் இங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது !
இங்கு வாழும் மாந்த இனமும் இவ்வுலகின் தொல்குடிதான் என்ற அறிவியல் ஆய்வு சார்ந்த முடிவே என்பது, இன்றும் தென்னிந்திய மரபுவழி மரபணு தனித்துவத்துடன் விளங்குகிறது என்பதனை ஐதிரபாத் அறிவியல் கழகமும், கேம்பிரிட்சு பல்கலைக் கழகமும் இணைந்த ஆய்வறிக்கை அறுதியிட்டு உறுதியாகச் சொல்வதன் மூலம் இவ்வுலகிற்கு தெள்ளிதின் விளங்குகிறது !
மேற்கண்ட உலக அறிவியலார் ஏற்ற ஆய்வு முடிவுகள் தமிழ் நிலத் தொன்மை பற்றியும் , தொல்குடித் தன்மை பற்றியும் கூறா நிற்கும் .
மேற்கண்ட உலக அறிவியலார் ஏற்ற ஆய்வு முடிவுகள் தமிழ் நிலத் தொன்மை பற்றியும் , தொல்குடித் தன்மை பற்றியும் கூறா நிற்கும் .