வரலாற்று - சம கால ஒப்பாய்வில் தாய்த்தமிழின் நிலை:
I .அ. காலம் காலமாய் வாழும் தமிழ்:
"தமிழினி மெல்லச்சாகும் என்றவன் பேதை !" என்றானே மீசைக் கவி ? அவன் கூறி 80 - ஆண்டுகள் சென்றும் பாரதி சொன்னது உண்மைதானே ! இன்னும் தமிழ் சாகவில்லையே ! ஏன் ? எப்படித் தமிழ் தொடர்ந்த தாக்குதல்களைத் தாக்குப் பிடித்தது ? ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டால் விளங்குமே !
·
i ). செம்மொழிச் செம்மல்கள்:
i ). செம்மொழிச் செம்மல்கள்:
· இப்படித் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மொழி, செம்மொழிச் செம்மல்களான மறை மலை அடிகள் உள்ளிட்ட நம் வாழ் நாளில் கண்ட பெருந்தமிழ் அறிஞர்களால் முன்னெடுக்கப்பட்டது என்பதையும், வடமொழிக் கலப்பைத் தடுப்பதில் போராளிகளாகவும் ஆனார்கள் என்பதை நாம் அறியக் கடப்பாடு உடையோர்.
· ii ). தமிழ் நாட்டு வரலாறு மறைக்கப்படும் அவலம் :
· தமிழ் நாட்டுவரலாறு, நம் தமிழர் உலகின் தொல்குடியாய் இருந்தும் நம் பள்ளிகளிலும், ஏன் கல்லூரிகளின் வராலற்றுப் பட்டப் படிப்பிலும் கூட (சில பல்கலைக் கழங்கள் தவிர) நமக்கு மறுக்கப் பட்டும், மறைக்கப்பட்டும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது.
·
iii ). தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி !
iii ). தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி !
ஏனெனில் எந்த ஒரு இனம் தன் வரலாறு அறியாமல் இருக்கிறதோ அந்த இனமும் நாடும் முழு அழிவை அடைவது உறுதி என்று உலக வரலாறு தெரிந்த அறிஞர் பலரும் கூறியுள்ளார்கள். "அரசியல் அறிவியல் " கல்வியிலும் மேலைநாட்டு மக்களும் தன் நாட்டு வரலாற்றைப் படித்து அறிந்து கொள்வதை பெருமையாகவும், வரலாற்று சின்னங்களை, நிகழ்வுகளை நன்றியுடன் நினைப்பதைத் தன் நாட்டுக்கு செய்யும் கடமையாகக் கருதுகிறார்கள்.
·
iv ) . தன்நாட்டு வரலாற்றின் அடிப்படையிலே அரசியல் :
iv ) . தன்நாட்டு வரலாற்றின் அடிப்படையிலே அரசியல் :
சில நூற்றண்டு வரலாறே கொண்ட ஐக்கிய அமெரிக்க நாட்டில் கூட வரலாற்றறிவு பெரும் பேராகக் கருதும் போக்கு இன்றளவும் உள்ளது. இங்கு எப்படி கணினி, மருத்துவம், பொறியியல், மற்றும் ஆழ்ந்த ஆங்கிலப் புலமை போல தன்னாட்டு வரலாறும் அவர்கள் நாட்டில் மதிக்கப்படுகிறது! அரசியல் வாதிகள் அங்கே வரலாற்றுப் பார்வையுடன் பெருமையுடன் நாட்டை நல்வழிப் படுத்தி முன்னேறிக் கொண்டே போகிறார்கள் ! நமது நாட்டிலே மேனாள் இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய் தமிழ் ஈழப் பிரச்சினையிலே, இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற தமிழர்கள் என வரலாறு அறியாது பிதற்றினார். உலகும் கைகொட்டி சிரித்தது!
v). ஆங்கில மொழியைக் கேவலப் படுத்தும் தமிழர்:
· ஆனால் நாமோ ? சினிமாக்களிலும், தொலைக்காட்சிகளிலும், மதுக் கடைகளிலும் நம்மைத் தொலைத்துக் கொண்டுள்ளோம். அழகு, பழகு தமிழை ஆங்கிலத்துடன் கலந்து சிறிதே தமிழ் பேசும் அவலத்தைக் கண்டு பிறர் நம்மைக் கைகொட்டி சிரிக்கும் இழி நிலை மாற்றுவோம்! மலையாளிகளும், கன்னடியரும், தெலுங்கரும் செய்யக் கூசும் இழி செயலே இது .
·
vi ). அழியும் மொழிகள் :
· தன் இன வரலாற்றை அறிந்த எந்த ஓர் இனமும் தன் மொழி , என அடையாளங்களை இழப்பதே இல்லை . ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ ) எச்சரிக்கையோ தாய்மொழிப் பற்றில்லாமையால், பல மொழிகள் அழிந்துள்ளதைப் பட்டியல் போடுகிறது ! அப்படி அழியப் போகும் மொழிகளுள் தமிழும் ஒன்று எனவும் கூறுகிறது !
·
ஆ . தமிழின் தொன்மை :
ஆ . தமிழின் தொன்மை :
· நமது மேனாள் தமிழக ஆளுனர் பி.சி.அலெக்சாண்டர் 1987-இல் ஆளுநர் ஆட்சியின் போது காரைக்குடியில் கம்பனடிப் பொடி சா.கணேசன் நடத்திய கம்பன் விழாவில் தன் விழாவில் தலைமை உரையில் (சென்னைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி) கூறியதாவது, "உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை வாழும் மொழிகள் நான்கு ! அதில் நமது தாய்த் தமிழும் ஒன்று !” என உலக மொழியியல் வல்லுனர்களின் ஆராய்ச்சியின் முடிவு . "லண்டனில் மேனாள் இந்திய தூதர் என்ற முறையில் , இலண்டனில் அனைத்துலக மொழியியல் (இந்தியர்களே இல்லா) வல்லுனர்களின் ஆராய்ச்சி மாநாட்டில் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஒரே இந்தியன் என்ற முறையில் நம் தாய்த் தமிழின் தொன்மைகேட்டு பெருமிதம் அடைந்தேன்" என்றும் கூறினார்.
II.தாய்த் தமிழின், தமிழினத்தின் வீழ்ச்சியின் துவக்கம் :
௧ . 3 -ஆம் நூற்றாண்டின் தமிழ் முற்றழிப்புத் தோல்வி :
தமிழ் நாட்டின் இருண்ட காலமான களப்பிரர் ஆட்சியில் ( கி.பி. 200 - ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 575 -ஆம் ஆண்டு வரை ) முன்னூறு ஆண்டுகள் நம் தமிழர் அரசியலமைப்பு,பண்பாடு , இலக்கியம், மொழி, பிற வரலாற்று நிகழ்வுகள் முதலியன முற்றிலுமாக கொடும் வன்முறை ஆட்சியால் அழிக்கப்பட்டன. தமிழ், தமிழர், அவர்தம் வரலாறு அங்க அடையாளம் தெரியாமல் பூண்டோடு அழித்து ஒழிக்க திட்டமிட்டு அக்காலத்தே யார் ஆண்டார்கள் என்ற செய்தி கூட மறைக்கப்பட்டது. தமிழுக்கு பதிலாக பிராகிருதம் , பாலி மொழிகள் திணிக்கப்பட்டன. சமண இலக்கியங்களில் ஆங்காங்கே குறிப்புக்கள் உள்ளதைத் தவிர தன்னைப்பற்றியும் அந்த தமிழ் எதிரிகள் (களப்பிரர்) வெளியிடவில்லை .
(பக்.161 - தமிழ் நாட்டு வரலாறு , முனைவர் பா.இறைஅரசன் )
௨ . பின் எவ்வாறு தமிழ் இன்றளவும் வாழ்கிறது ?
·
தாய்த் தமிழின் வலிமையையும், சிவ வழிபாடும், ஊழ்வினை மேல் நம்பிக்கையும் களப்பிரர் பால் தமிழருக்கு தீராப்பகை ஏற்ப்படுத்தியது. களப்பிரர்கள், காஞ்சியிலிருந்து 6 -7 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல்லவன் சிம்ம விஷ்ணு முதல், நரசிம்மவர்மன் வரையும், 7 - 8 - ஆம் நூற்றாண்டுகளின் மேலசாளுக்கியன் முதலாம் விக்ரமாதித்யன் முதலியோரும் , தெற்கிலிருந்து பாண்டியன் கடுங்கோன் ஆகியவர்களாலும் அழிக்கப்பட்டார்கள்.
No comments:
Post a Comment