தமிழின் தொன்மை::
தமிழ்நாட்டில் 1987-இல் ஆளுநர் ஆட்சியின் போது காரைக்குடியில் கம்பனடிப்பொடி சா.கணேசன் நடத்திய கம்பன் விழாவில் தலைமையேற்ற ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தமது உரையில்,
" உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை வாழும் மொழிகள் நான்கு; அதில் நமது தாய்த் தமிழும் ஒன்று என உலக மொழியியல்
வல்லுநர்களின் ஆராய்ச்சியின் முடிவு".
"இலண்டனில் மேனாள் இந்திய தூதர் என்ற முறையில் , அனைத்துலக மொழியியல் வல்லுநர்களின் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஒரே இந்தியன் என்ற முறையில் நம் தாய்த் தமிழின் தொன்மைகேட்டு பெருமிதம் அடைந்தேன்"
என்று கூறினார்.
-
-
(1987-இல் சென்னைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி) .
3 comments:
From: Thayumana Sundaram
Date: 2010/3/4
Subject: தமிழின் தொன்மை
It is perfectly alright. You are already doing great work and Kudos to your efforts! Please keep up the good work.
Best Regards,
Thayumana Sundaram,
Senior Manager,
Risk Management & Compliance Division,
Kuwait Finance & Investment Co. K.S.C.C,
Kuwait City
Tel: +965 1889000 Ext:668; Mobile: +965 66509448
Email : t.sundaram@kfic-kw.com
KFIC Logo
அன்புள்ள நண்ப
தங்கள் வலைப்பூ நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக மெருகு ஏறி மணம் பரப்பி வருகிறது.
தமிழின் தொன்மை, தமிழரின் தொழில் நுட்ப அறிவு
கற்பனைச் சிறகுகள், காவிரி ஆற்றில் மணல் கொள்ளை
ஆகிய பொருள்களில் தங்கள் எண்ணங்களையும்
கருத்துகளையும் வலைப்பூவின் வழி தெரிவிக்கும்
அழகு சிறந்து விளங்குகிறது.
ஓங்கலிடைவந்து உயர்ந்தோர் எனும் தொடங்கும் தனிப்பாடலில்
பரிதியும் கடலும் தோன்றிய காலத்தில் தன்னேரில்லாத
தமிழும் தோன்றி வளர்ந்தது எனும் கருத்தை அறிய
முடிகிறது.
எம்மனோற்கு சமயத்தின்பால் நாட்டம் இல்லை. ஆனாலும்
தேவாரம் திருவாசகம் திருக்குறள் நாலடியார் போன்ற
நூல்களைப் படிப்பது மிக தேவையான ஒன்று.
சிறப்பாகச் சொல்ல வேண்டுமெனில் நம் இளஞ்சிறார்கள்
மனப்பாடம் செய்து ஒப்புவித்துப் பழகவேண்டும். தமிழைத்
தெளிவாகப் பேசாத ஒரு அவல நிலைமைக்குக் கரணியம்
அம்மொழியைப் படிக்காமையே. தாய்மொழியைக் கற்காமல்
ஆய்வுப்பட்டமும்பெற முடியும் மேல்படிப்பும் கற்க முடியும் எனும் சூழ் நிலை
நம் தமிழ் நாட்டில்தான் உள்ளது. இத்தகைய இழி நிலையைப்
போக்க நாம் முனைதல் வேண்டும். இந்த அடிப்படையில்தான்
சைவத் திருமுறைகளை ஓதுவித்தல் நல்லது தேவையானது
என்னும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
தொழில் நுட்ப அறிவு தமிழருக்கு ஏற்கனவே உள்ளது என்றும்
அதற்கு எடுத்துக்காட்டு கல்லணை என்றும் சொல்லிருக்கிறீர்கள்.
வியக்கத்தக்க ஒன்று. பெரிய கோவிலையும் கட்டிடக்கலைக்கு
எடுத்துக்காட்டலாம். இதுபோன்றே வேறு பல துறைகளில் அருஞ் செயல்கள்
யாவை என்பதையும் ஆராய்தல் நலம் பயக்கும்.
மிக மிக தேவையான உடனடியாக செய்யவேண்டிய வேலை என்னவெனில்
தமிழ் பயின்றால் வாழ்வு செழிப்பாக இருக்கும். வளம் பெருகும். எனும் சூழ்நிலையை
உருவாக்க முயலுதல் வேண்டும். எல்லாமே பொருள் சார்ந்த உலகம் என்று
ஆகிவிட்ட நிலையில் தமிழ் மொழி செல்வத்தைக்கொண்டு வரும் எனும்
நம்பிக்கையை ஏற்படுத்தும் நிலை வர ஆவன ஆற்ற வேண்டும்.
தமிழ் வழி கற்றோர்க்கே தமிழ்நாட்டு அரசில் பணி என்று சட்டம் கொண்டு
வரவும் வேண்டும். தமிழ் வழி படிப்போர்க்கு அனைத்து ஏந்துகளும்
வழங்கவும் வேண்டும்.இப்போழ்து ஆட்சி புரியும் அரசு ஆரவார விழாக்களில்
ஈடுபட்டு களி இன்பம் பெறுவதிலும் மக்களை மயக்கதில் ஆழ்த்தி வைப்பதிலும்
ஆர்வம் காட்டி வருகிறது. இப்போக்கு தமிழ் வளர்ச்சிக்கு எவ்வகையானும்
உதவாது.
அன்புடன்
செம்மல்
தங்கள் பணி செம்மையாய் செவ்வனே முடிய வாழ்த்துக்கள் ..
Post a Comment