௧ . தொல்குடித் தமிழர் வரலாறு ஏன் ? :
நம் தமிழர் வரலாறு நாம் அறிய வேண்டுவது இயல்பான செயலாகும். இதனை
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பொறியியல், மருத்துவப் படிப்பு போன்றே, அவரரவர் வரலாற்றை அறிவதற்கு முன்னுரிமை தந்து பெருமைப் படுகின்றனர் நன்றியுடன். சமகால அரசின் செயல் பாடுகள் அவர்தம் நாடுகளின் வரலாற்றை ஒட்டியே உள்ளன !
௨. யுனெஸ்கோவின் முடிவு :
தமிழர் வரலாறா ? பத்தாம் பசலி, பழம் பெருமை பேசுவது வீண் என நம்மில் சிலர் நினைத்து நம் வேரில் வெந்நீர் ஊற்றும் கொடுஞ்செயலை கண்டும் காணாதுவிட்டோமாயின் நம் இனமும் மொழியும் அழியும் என்பது "யுனெஸ்கோ" போன்ற பன்னாட்டு அமைப்பின் முடிந்த முடிபு.
௩. "அனைத்துலகத் தாய் மொழிகளின் நாள் - 2004" :
"அனைத்துலகத் தாய் மொழிகளின் நாள்” யுனெஸ்கோவின் ஆலோசனைப்படி ஆண்டு தோறும் பிப்ரவரித் திங்கள் 21- ஆம் நாள் அனைத்துலக நாடுகளிளிலும் கொண்டாடுகிறார்கள், நம் இந்திய நாடு உட்பட ! ஏன் இந்த விழாவைக் கொண்டாடச் சொன்னார்கள்? வேற்று மொழித் திணிப்பால் தாய் மொழி அழியும் எனும் காரணியால் ! ஆயின் நமக்கு ஏன் இதற்கு மாறான மன நிலை ? நம் தாய்த் தமிழ் காக்க நாம் அனைவரும் நம் வரலாறு மற்றும் சமகாலப் பார்வையினை ஆய்ந்து அறிந்திடல் வேண்டும்!
அன்புத் தமிழ் உள்ளங்களே ! நம் வரலாற்றை ஏன் சமகாலப் பார்வை கொண்டு ஆராய வேண்டும் வேறு ஏதேனும் காரணிகள் உண்டா ?
விடைபெறுகிறேன் மீண்டும் தொடரவே !
No comments:
Post a Comment