இன்றைய தமிழின் நிலை :
அ.) ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம் :
இன்றைய உண்மை நிலையை ஏற்றுக் கொள்வதில் மாறான கருத்து இருக்காது. நம்மில் பலருக்குப் ஆங்கிலம் கலவாமல் பேசுவது இயலாது என்பதும் உண்மை. தனித் தமிழில் பேசுவது என்பது இயல்பான வாழ்க்கை முறையில் நடவாது என்பதை ஏற்றுக் கொள்ள த்தான் வேண்டும்.
ii).ஆனால் தமிழர்களுக்குள்நுனி நாக்கு ஆங்கிலத்தில்70-விழுக்காட்டு க்கு மேல் ஆங்கிலத்திலும் பின் தாய்த் தமிழிலும் பேசிக் கொள்வதை விடக் கேவலமானது இருக்க இயலாது. இது அன்றாடம் நம்மில் பலருக்கு பழகிப் பழகி "தமிங்கிலம்" என்ற மொழித் தோற்றம் இயல்பாதாகிவிட்டதோ? தமிங்கிலம் பேசுபவர்களைத் தமிழை அழிக்கும் "பண்ணி மொழியாளன் " என்றும் சிலர் கடுமையாகக் கூறினர்.
எ.கா:
“Cricket game -ல் "Ball-ஐ "throw " பண்ணி அவன் "catch " பண்ணி "out " பண்ணி விட்டான்.”
iii).ஆனால் மாற்று சிந்தனையாளரோ, இவர்கள் தமிழையா கொலை பண்ணுகிறார்கள்? இல்லை! இல்லை! ஆங்கிலத்தையல்லவா கொலை பண்ணு கிறார்கள் ! என்கின்றனர்.
iv) .ஆனால் எதோ ஒன்று நடக்கிறது ! தமிழர்களே விழித்தெழுங்கள் !
இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் உயர்ந்த IPS அல்லது IAS, அரசு அலுவலர் பலர் தொலைக் காட்சி நேர்காணல் , அறிக்கை மற்றும் செய்தியாளர் கூட்டங்களில் அந்த அந்த மாநில மொழிகளில் பேசுவதைப் பலமுறை கண்டும் இந்த பண்ணி மொழி பேசும் தமிழனுக்குச் சுரணை வராதா ?
v).தமிழனைத் தவிர அனைவரும் அவரவர் தாய்மொழியில் பேசுவதைக் கேட்டும் புத்தி வராதா ? ஆங்கிலத்தை தேவையில்லாமல் பேசுவதைப் பெருமையாக நினைக்கும் தமிழர்களைப் பிற மொழியாளரும், வெளிநாட்டாரும் தமிழனைக் கேவலமாகப் பார்ப்பதும் பேசுவதும் தெரியவில்லையா? காதில் விழவில்லையா? இந்த அடிமை புத்தியால்தான் நம் இனமும் மொழியும் அழிகிறது !
ஆ ) தமிழ் நாட்டில் மட்டும் ஏன் ? :
இந்த உண்மைகளை, கலக்கத்தை வெளியிடும் நம்மைப் போன்றோருக்கு கிடைக்கும் பட்டம், குறுகிய மனப்பான்மை கொண்ட "தேச விரோதி" என இன்னும் பல.
ii).தாய் மொழிக்கல்வி தமிழ்நாட்டின் தமிழனுக்கு கட்டாயமாக்கப்படும் என்று வாய் திறந்தாலோ தமிழின் எதிரிகள் ஒன்று கூடி உரக்க ஒப்பாரி வைப்பதும, அதனை ஒட்டியே சில ஆங்கில, தமிழ் நாளிதழ்களும், பண் பாட்டினைக் கெடுக்கும் ஆங்கிலச் செய்தித் தொலைக் காட்சிகளிலும், சிறு குழுக்களாக இயங்கும் குறுகிய நோக்கு கொண்ட தமிழ் இயக்கங்களின் நாட்டைத் துண்டாடும் சதி, என ஓலைமிடுவதைப் பல முறைக் கண்டுள்ளோம்!
iii).செறிவான வீரம் மிகுந்த தமிழின எதிரிகள் நீதி மன்றங்களை அணுகி தடையாணை வாங்கிய வரலாறு உண்டே இங்கே!
இ). தமிழனே தமிழ் படியாமை :
தாய்த் தமிழனே தமிழில் அதிக மதிப்பெண் பெற முடியாதென்று பிரெஞ்சு அல்லது வட மொழி எடுத்து தமிங்கிலம் அவதாரம் எடுத்துவிட்டது அவலம் என்ற அறியாமையில் உழல்கிறானே !
ii).இந்த ஆணவம் கொண்ட தமிங்கில அவதாரங்கள் நீதி மன்றங்களை நாடி தடைகள் பல வாங்கித் தமிழைத் தாய் மொழியாக கொண்டவரையும் தமிங்கிலம் பேச வைத்து ஆணவம் கொண்டவராக மாற்றினரே!
ஈ). தமிழ் எதிர்ப்பாளரின் தவிப்பு ?
செந்தழ்ச் செம்மல்களின் தீரா சாபங்களைப் பெற்ற இவர்களே தமிழ் மொழியை அழிப்பவர் என்ற யுனெஸ்கோ மற்றும் மொழி வல்லுனர்களின் கருத்துக்களை முன்னரே இவ்வலைப்பதிவின் எண்: ௧- இல் பதிவு செய்துள் ளேன். தமிழின் , இனத்தின் எதிரிகளாக உள்ள சில ஆங்கில, தமிழ் நாளி தழ்களும், தமிழ் மற்றும் தமிழின அழிப்பாளர்களும் என்ன பதில் சொல்லப் போகி றார்கள்?
வேறு எந்த ஆயுதத்தை எடுத்துத் தமிழை அழிக்கப் போகிறார்கள் ?
ஏன் இன்று இந்த இழிநிலைத் தமிழர்க்கு ? சிந்திப்பீர் ! சிந்திப்பீர் !
உ). தமிழ் வழிக் கல்வியின் மாண்பு:
· i).நமது சமச்சீர் கல்வி கண்ட கல்வியாளர், முன்னாள் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் முத்துக்குமரன் பொறியாளர் ஆயினும் சங்கத்தமிழ் பரி பாடல் வரை அறிந்த தமிழறிஞர் !
· ii).முன்னாள் துணை வேந்தர் வ.செ.குழந்தைசாமி அவர்களும் ஒரு பொறியாளர் ஆனாலும் தமிழறிஞர் !
· iii)மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல் காலம் என்ற எளிய குடும்பத்தைச் சேர்ந்த அறிஞர் குறள் வழி நடந்து, பாராளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் திருக்குறளை ஓங்கி ஒலித்தாரே !
· iv).சந்திரனுக்கு ஆள் அனுப்பும் திட்ட தலைவரே தமிழ்வழிக் கல்வி பெற்றவர்! அவரே மயில்சாமி அண்ணாதுரை ! அவரும் சில நாட்களுக்கு முன்னர் நம் முதல்வரை சந்தித்து வெளியில் காத்திருந்த ஊடகவியலார் வாயிலாக தமிழ் வழிக் கல்வி பெறுமாறு அனைவர்க்கும் அறைகூவல் விடுத்தாரே !
· v).எண்ணிலடங்கா இந்திய ஆட்சிப் பணி இ.ஆ.ப., இ.வெ.ப.IFS, IRS, பதவிகளை தமிழில் எழுதியே இன்றைக்கும் அடைந்து வருகிறார்கள் என்பதும் உண்மை.
ஊ) .தமிழ் வழிக் கல்வியினரின் ஆங்கிலப் புலமை :
· அனைவர்க்கும் கல்வி என்ற காமராசர் கண்ட கனவின் பயனாய் 90 விழுக் காடு தமிழ் வழிக் கல்வி பெற்ற பலரும் பல எட்டா உயரங்களை சிகரங்களை அடைந்தனர். இன்தமிழை இன்றுவரை தமிழ்வழிக் கல்வி பெற்ற நமது தலை முறை எல்லாத் துறைகளிலும் கொடிகட்டிபறப்பது உள்ளதை நம்மில் அனை வரும் அறிவோம். தமிழின்பால் காதலும் ஆங்கிலத்திலும் பெரும் திறமையுடனே வாழ்க்கை நடத்தியும் வருகிறோம். ஆங்கிலத்தின் முழுப் பயனும் அறிந்தே தாய்த் தமிழைப் போற்றியும் வாழ்கிறோம் என்பதும் உண்மை.
(தொடரும் )
(தொடரும் )
No comments:
Post a Comment